‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை

 
தமிழகம்

சமூக வலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை விதிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாவட்டம் வேலந்தாவளத்தில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்​பின் நிறு​வனர் அண்​ணா​மலை செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அரசி​யலில் பெண்​கள் குறித்து தரக்​குறைவாகப் பேசுவதை மக்​கள் விரும்ப மாட்​டார்​கள். அரசி​யலில் அடிப்​படை மாற்​றங்​களைக் கொண்​டுவரவும், புதிய தலை​வர்​களை உரு​வாக்​கவும் உள்​ளாட்​சித் தேர்​தலில் எங்​கள் அமைப்பு தனித்​துப் போட்​டி​யிடும். தேர்​தல் ஆணை​யம் போன்ற அரசி​யலமைப்​பு​களின் மீதான பொது​மக்​களின் நம்​பிக்​கையைக் குலைக்​கும் வகை​யில், யாரும் செயல்​படக்​கூடாது.

தமிழகத்​தில் 10 முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவர்​களின் எண்​ணிக்கை கணிச​மாகக் குறைந்​துள்​ளது. உயர்​கல்​விக்கு செல்​லும் மாணவர்​களின் விகிதம் குறைந்து வரு​வது கவலை​யளிக்​கிறது. இளம் தலைமுறை​யினரின் எதிர்​காலம் கருதி, 18 வயதுக்கு உட்​பட்ட சிறு​வர்​கள் சமூக வலை​தளங்​களைப் பயன்​படுத்​து​வதற்கு மத்​திய அரசு தடை விதிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT