கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு மற்றும் நிதிக்குழு, 125 பணி நிலைகளைக் கொண்ட ஊழியர்களுக்கு மறுஊதிய நிர்ணயம் செய்யப்பட்ட பின்னரே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு நாளை (செப்.15) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது.