டெல்லியில் அமைச்சர் அமித் ஷாவுடன் அண்ணாமலை

 
தமிழகம்

டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் அண்ணாமலை

அமைச்சர் அமித் ஷாவுடனும் சந்திப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பாஜக​வில் இருந்து வில​கு​வ​தாக தேசி​யத் தலை​வர் நிதின் நவீனை டெல்​லி​யில் சந்​தித்து அண்​ணா​மலை ராஜி​னாமா கடிதம் கொடுத்​துள்​ளார். அத்​துடன் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை​யும் சந்​தித்து தனது முடிவு குறித்து விளக்​கம் அளித்​த​தாகத் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

கடந்த 2020-ம் ஆண்டு ஐபிஎஸ் பணி​யைத் துறந்து பாஜக.​வில் இணைந்த அண்​ணா​மலை, தனது அதிரடி​யான அரசி​யல் பாணி​யால் குறுகிய காலத்​திலேயே இளைஞர்​கள் மத்​தி​யில் செல்​வாக்கு பெற்​றார். பாஜக மாநிலத் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்ட அவர், தமிழகம் முழு​வதும் தீவிரப் பயணம் மேற்​கொண்டு அக்​கட்​சியை ஒரு முக்​கிய சக்​தி​யாக முன்​னிறுத்​தி​னார்.

எனினும், கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு முன்​ன​தாக அண்​ணா​மலை திடீரென தலை​வர் பதவி​யில் இருந்து மாற்​றப்​பட்​டு, அவருக்​குப் பதிலாக நயி​னார் நாகேந்​திரன் நியமிக்​கப்​பட்​டார். இந்த மாற்​றம் அண்​ணா​மலை ஆதர​வாளர்​களிடையே கடும் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யது.

இந்த மாற்​றத்​துக்​குப் பிறகு சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக.வுடன் பாஜக கூட்​டணி அமைத்​தது. ஆனால், தேர்​தலில் அண்​ணா​மலை போட்​டி​யிட வாய்ப்பு மறுக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இதனால், அண்​ணா​மலை தேர்​தல் பிரச்​சா​ரத்​தி​லும் பெரிய அளவில் ஈடு​பாடு காட்​ட​வில்​லை.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் 27 இடங்​களில் போட்​டி​யிட்ட பாஜக, வெறும் ஒரு தொகு​தி​யில் மட்​டுமே வெற்றி பெற்று படு​தோல்​வியைச் சந்​தித்​தது. இந்​தத் தோல்விக்​குத் தலை​மைப் பொறுப்​பில் இருந்த நயி​னார் நாகேந்​திரனின் தவறான அணுகு​முறையே காரணம் என அண்​ணா​மலை​யின் ஆதர​வாளர்​கள் போர்க்​கொடி தூக்​கினர்.

மற்​றொரு புறம், அண்​ணா​மலை தனிக்​கட்சி தொடங்​கப் போகிறார் என்ற பேச்​சுகளும் எழுந்​தன. பாஜக.​வில் நீடித்த இந்த உட்​கட்சி பூசல், சமீபத்​தில் மத்​திய அரசின், ‘மும்​மொழிக் கல்விக் கொள்​கை’ விவ​காரத்​தில் வெளிப்​படை​யாக வெடித்​தது. சிபிஎஸ்இ பள்​ளி​களில் 9-ம் வகுப்பு முதல் மும்​மொழிக் கொள்​கையை அமல்​படுத்​தும் மத்​திய அரசின் உத்​தரவை எதிர்த்து அண்​ணா​மலை அறிக்கை வெளி​யிட்​டார். இது பாஜக மேலிடத்தை அதிர்ச்​சி​யடைய வைத்​தது.

இந்​நிலை​யில், டெல்லி செல்​வதற்​காக சென்னை விமான நிலை​யத்​துக்கு நேற்று முன்​தினம் அண்​ணா​மலை வந்​தார்.அப்​போது, அவரது காரில் பாஜக கொடி கட்​டப்​பட​வில்​லை. இது குறித்து செய்​தி​யாளர்​கள் அவரிடம் கேள்வி எழுப்​பிய போது, “இரண்டு நாட்​களில் விரி​வாகப் பேசுகிறேன்” என்று கூறி​விட்டு புறப்​பட்​டார்.

டெல்லி சென்ற அண்​ணா​மலை, 5 பக்​கங்​கள் கொண்ட ராஜினாமா கடிதத்​தை, பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்​.சந்​தோஷ் மற்​றும் தேசி​யத் தலை​வர் நிதின் நவீன் ஆகியோரை நேற்று நேரில் சந்​தித்து வழங்​கிய​தாகத் தெரிகிறது. அந்த 5 பக்​கக் கடிதத்​தில், கடின உழைப்​புக்கு அங்கீகாரம் வழங்​கப்​ப​டாதது, மூத்த தலை​வர்​களால் திட்​ட​மிட்டு ஓரங்​கட்​டப்​பட்​டது, சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்பு மறுக்​கப்​பட்​டது, தமிழக பாஜக​வில் நில​வும் நிர்​வாகச் சீர்​கேடு​கள் மற்​றும் நயி​னார் நாகேந்​திரன், எல்​.​முரு​கன் ஆகியோர் மீதான புகார்​களை அவர் விரி​வாகப் பட்​டியலிட்​டுள்​ள​தாகத் தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

அண்​ணா​மலை​யின் ராஜி​னாமா முடிவை அறிந்த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, அவரை நேரில் அழைத்து பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். ஆர்​எஸ்​எஸ் மூத்த தலை​வர்​களும் அண்​ணா​மலை​யைச் சமா​தானப்​படுத்த முயன்​றனர். எனினும் தனது முடிவில் அவர் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்​ணா​மலை​யின் பிறந்த நாளான ஜூன் 4-ம் தேதி (நாளை), அவர் தனது அடுத்​தகட்ட அரசி​யல் நகர்வு குறித்த முக்​கிய அறி​விப்பை வெளி​யிடு​வார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ‘‘ஆன்​மீகம் மற்​றும் தேசி​யம்’’ ஆகிய​வற்றை இரு கண்​களாகக் கொண்டு புதிய அரசி​யல் இயக்​கம் அல்​லது கட்​சியை அவர் தொடங்க வாய்ப்​புள்​ள​தாக அவரது ஆதர​வாளர்​கள் உற்​சாகத்​துடன் தெரிவிக்​கின்​றனர். அண்​ணா​மலை​யின் இந்த முடி​வைத் தொடர்ந்​து,

தமிழக பாஜக​வில் உள்ள அவரது ஆதர​வாளர்​கள் மற்​றும் மாவட்ட நிர்​வாகி​கள் பலர் தங்​களது பதவி​களை ராஜி​னாமா செய்து வரு​கின்​றனர்.

அண்​ணா​மலை​யின் இந்த அதிரடி நகர்வு தமிழக பாஜக​வுக்​குள் ஒரு பெரும் பிளவை ஏற்​படுத்​தி​யுள்​ளது. நிலைமை கையை மீறிச் செல்​வதைத் தடுக்க, டெல்லி மேலிடம் தற்​போது தீவிர சமரச நடவடிக்​கை​யில் இறங்​கி​யுள்​ளது. அண்​ணா​மலை தனது 5 பக்​கக் கடிதத்​தில் அடுக்​கி​யுள்ள அடுக்​கடுக்​கான புகார்​கள் குறித்து நேரில் விளக்​கம் கேட்​ப​தற்​காக, மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரனுக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு விடுத்​துள்​ளது.

நயி​னார் நாகேந்​திரனிடம் விளக்​கம் கேட்ட பிறகு, தமிழக பாஜக தலை​மை​யில் மீண்​டும் ஒரு அதிரடி மாற்​றம் இருக்​கலாம் என டெல்லி அரசி​யல் வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. அது​வரை, அவசரப்​பட்டு எந்த முடிவை​யும் பொது​வெளி​யில் அறிவிக்க வேண்​டாம் என்​றும், டெல்​லி​யிலேயே தங்​கி​யிருக்​கு​மாறும் அண்​ணா​மலை​யிடம் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா அறி​வுறுத்​தி​யுள்​ள​தாக நம்​பத்​தகுந்த வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

அண்​ணா​மலை தனது ராஜி​னாமா கடிதத்​தைத் தேசி​யத் தலை​வரிடம் நேரில் கொடுத்​திருந்​தா​லும், இது​வரை அவர் பாஜக​வில் இருந்து அதி​காரப்​பூர்​வ​மாக வில​கு​வ​தாக அவர் அறிவிக்​க​வில்​லை. அவரது சமூக வலை​தளப் பக்​கங்​களின் ‘பயோ’- விலும் தற்​போது வரை அவர் ‘பாஜக நிர்​வாகி’ என்றே குறிப்​பிட்​டுள்​ளார்.

ராஜி​னாமா கடிதம் கொடுத்த பிறகும் அண்​ணா​மலை காட்​டும் இந்த நிதானம், டெல்லி மேலிடம் அவருக்​குத் தரும் முக்​கி​யத்​து​வத்​தையா அல்​லது சமரசப் பேச்​சு​வார்த்​தைகளுக்கு அவர் கொடுத்​துள்ள அவகாசத்​தையா என்ற கேள்வி எழுந்​துள்​ளது. ஜூன்​ 4-ம்​ தேதி (நாளை) அவரது பிறந்​த நாளில்​ இந்​த அரசி​யல்​ சஸ்​பென்​ஸுக்​கு முழு​மை​யான விடை கிடைக்​கும்​ என எ​திர்​பார்​க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT