அண்ணாமலை
கோவை: தமிழகத்தில் நல்லதொரு மாற்றம் வருமென்று முழுமையாக நம்புகிறேன் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை இன்று காலை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழகத்தில் காலை முதல் எல்லோரும் தங்களது ஜனநாயக கடமையை சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.அனைத்து இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழக மக்கள் வரிசையில் காத்திருந்த வாக்களித்து வருகின்றனர்.
5 கோடியே 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 29 வயதிற்கு கீழே ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் கிட்டத்தட்ட 17 லட்சம் பேர் உள்ளனர். அனைவரும் நிச்சயம் தங்களது ஜனநாயக கடமை செய்ய வேண்டும் . அனைவரும் வாக்களிக்க வேண்டும். மதியம் வெயில் அதிகமாக இருந்தால் கூட குடையுடன் வந்து பெரியவர்கள் வாக்களிக்கலாம் வாக்குச்சாவடியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்களிக்காமல் யாரும் வீட்டில் இருந்து விட வேண்டாம்.
தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் என்று முழுமையாக நான் நம்புகின்றேன். மனசாட்சிப்படி சரியான முறையில் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். 84 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என செய்திகள் கேள்விப்பட்டேன். தமிழ்நாடு எப்பொழுதும் அமைதியான மாநிலம். நாம் ஒரே கட்டமாக தான் தொடர்ந்து வாக்குப்பதிவு நடத்தி வருகிறோம்.
மக்கள் எப்போதும் அமைதியாக வந்து வாக்களித்து விட்டு சென்று விடுவார்கள் எதுவும் இருக்காது. அதேசமயம் கடந்த இரண்டு மூன்று நாட்களாக வாக்குக்கு பணம் கொடுத்தல், கரூரில் பார்த்தால் தங்கம் வெள்ளி பொருட்கள் கொடுத்தல், கோவையில் பணம் விநியோகித்தல் என வாக்குப்பதிவுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதிகம் மீறி இன்று வாக்களிக்க வருபவர்கள் மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள் என்று நம்புகின்றேன்.
சென்னையில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லக்கூடிய பேருந்து வசதிகள் குறைவாக இருக்கிறது. சிங்காநல்லூரில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளும் குறைவாய் இருக்கிறது என்ற புகார் வந்தது. தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. பேருந்துகள் பொதுஅளவுக்கு இருக்கிறது என்று உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். கட்சி சார்ந்தவர்கள் பொதுவாக இருப்பவர்கள் இளைஞர்கள் கூட பேருந்து வசதி தொடர்பாக புகார் கூறுகின்றனர்.
அனைவரும் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் இன்னும் சிறப்பாக தன் பணியை செய்திருக்க வேண்டும் என்று என் தனிப்பட்ட கருத்து வீட்டுக்கு வீடு நடந்து சென்று ஒரு வாக்குக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். கரூரில் வாக்காளர்களுக்கு தங்க நாணயங்கள் கொடுக்கின்றனர். இவை அனைத்தும் ஒரே நாளில் வரவில்லை. முன்னரே கொண்டு வந்து எங்கோ ஒரு இடத்தில் பதுக்கி வைத்து இதை கொண்டு சென்று இருக்கின்றனர்.
சாதாரண பொதுமக்கள் பணம் எடுத்துச் செல்லும் பொழுது கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பணம் பொருட்களை தேர்தல் ஆணையம் பிடித்துள்ளது என்று கூறினாலும் அதில் அரசியல் பிரமுகர்களின் பொருட்கள் எவ்வளவு. கோவையில் அதிமுக வேட்பாளர் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடிய நிலை ஏற்பட்டது. வாக்காளர் வாக்குச்சாவடிக்கு வரும்பொழுது நேர்மையாக நியாயமாக மனசாட்சிப்படி வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் காரணமாக வாக்கு சதவீதம் என்னை பொறுத்தவரை வழக்கமாய் இருப்பது விட இரண்டு பேரும் இரண்டு சேரும் உயரும். இரண்டரை சதவீதம் உயரும். அந்த இரண்டரை சதவீதத்திற்கு மேலே வரும் வாக்குப்பதிவு தான் அதிகமான வாக்குப்பதிவு சதவீதமாக நாம் கணக்கெடுத்துக்கொள்ள வேண்டும். எஸ்.ஐ.ஆர் பணிகள் அனைத்தும் நேர்மையான முறையில் நடந்தது. இந்த தேர்தல் வழக்கமான தேர்தல்களை தாண்டி அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது.
வாக்குக்கு பணம் பொருட்கள் தைரியமாக கொடுக்கின்றனர். கோவை புறநகரில் ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் பணம் கொடுக்கின்றனர். அதையும் தாண்டி நடைபெற்றுள்ளது. இது தேர்தல் ஆணையத்திற்கே ஒரு பாடமாக நான் பார்க்கிறேன். எனவே தேர்தலுக்கு மூன்று மாதத்திற்கு முன்ப தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
வங்கி பரிமாற்றங்கள், நிதி பரிமாற்றங்கள் போன்றவற்றை கண்காணிக்க வேண்டிய சூழல் உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே அரசியல்வாதிகள் பதுக்க வேண்டிய பணங்களை மதிக்கின்றனர் . இன்று காலை பார்க்கும் பொழுது பல இடங்களில் திமுக தனது சாஃப்ட் பிரச்சாரத்தை செய்கிறது.
வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் எல்லைக்குள் யாரும் எந்த பிரச்சாரத்திலும் ஈடுபடக்கூடாது. ஆனாலும் பல இடங்களில் திமுகவினர் சாஃப்ட் பிரசாரம் செய்கின்றனர். தேர்தல் ஆணையம் இதை கண்காணித்து தீவிரமாக பரிசளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக செயலை நாங்கள் கண்டிக்கின்றோம்.
நான் பிரசாரத்தில் பேசியது உறுதியாக நடக்கும். நான் அரசியலுக்கு வந்த பிறகு வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் போடுவது வாடிக்கை. இதை ஜெகன் மோகன், ரெட்டி விஜய் போன்றவர்கள் போடுகின்றனர்.
இதற்கு வேறு எதற்க்கும் தொடர்பு இல்லை. இந்த பக்கம் சேர்க்க வேண்டாம். நான் ஒரே பக்கம் தான் இருக்கிறேன். சரியான பக்கம் நியாயமான பக்கம் மாறுகிறேன் . கண்டிப்பாக இந்த முறை தேர்தல் ஆணையம் இன்னும் சிறப்பாக செய்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து கடைசியாக இரண்டு மூன்று நாட்கள் விரும்பத்தகாத நிகழ்வுகளை நடத்தியுள்ளனர் குறிப்பாக திமுக நடத்தியுள்ளனர். அதை இன்று பேசி பிரயோஜனமில்லை. மக்கள் இதையெல்லாம் கணக்கில் வைத்துக் கண்டு வாக்களிப்புடன் விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.