லண்டனில் நடந்த கருத்தரங்கில் பேசுகிறார் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை.

 
தமிழகம்

“பத்தோடு பதினொன்றாக இருக்க விருப்பம் இல்லை; ஒரு லட்சம் தலைவர்களை உருவாக்குவதே இலக்கு” - அண்ணாமலை திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் ஒரு லட்​சம் தலை​வர்​களை உரு​வாக்​கிய பிறகு அரசி​யல் கட்சி தொடங்​கு​வ​தாக லண்​டனில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அண்​ணா​மலை தெரி​வித்​தார்.

‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பின் இங்​கிலாந்து (UK) பிரிவு சார்​பில் ‘தொலைநோக்​குப் பார்​வை, தலை​மைத்​து​வப் பெண்​கள் 2026’ என்ற தலைப்​பில் லண்​டன் ஹவுன்​ஸ்​லோ​வில் உள்ள கிரான்ஃ​போர்ட் கம்​யூனிட்டி கல்​லூரி​யில் கடந்த 5-ம் தேதி கருத்​தரங்​கம் நடை​பெற்​றது. இதில் ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பின் தலை​வர் அண்​ணா​மலை கலந்​து​கொண்​டு, மருத்​து​வம், அரசி​யல், சமூக சேவை என பல்​வேறு துறை​களில் முத்​திரை பதித்த 37 தமிழ்ப் பெண்​களுக்கு விருதுகளை வழங்​கி​னார்.

நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: மாற்​றத்தை கொண்​டுவர வேண்​டும், நல்ல சமு​தா​யத்தை உரு​வாக்க வேண்​டும் என்ற நோக்​கத்​துடன் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு செயல்​படு​கிறது. எனவே, நாம் ஒவ்​வொரு அடியை​யும் மெது​வாக, தெளி​வாக எடுத்து வைக்க வேண்​டும். கடந்த ஆக.3-ம் தேதி ஒரே நாளில் 80 கோடி மரக்​கன்​றுகளை நட்டு உலகையே வியக்க வைத்​தது எத்​தி​யோப்​பி​யா. நமது கனவு​கள், இலக்​கு​கள் பெரியது.

எனவே, அதே​போன்ற ஒரு மாபெரும் இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். தமிழகத்​தில் 50 லட்​சம் மரக்​கன்​றுகள் நடு​வது நம் லட்​சி​யம். இது​வரை 9 லட்​சம் நட்​டுள்​ளோம். தமிழகத்​தில் ஏற்​கெனவே 16 கட்​சிகள் உள்​ளன. இதில் 17-வது கட்​சி​யாக நம் இயக்​கம் இருப்​ப​தில் விருப்​பம் இல்​லை.

நமக்கு தேவை மற்​றுமொரு கட்சி அல்ல; ஒரு சமூக மாற்​றத்தை ஏற்​படுத்​தக்​கூடிய வலிமை​யான தலை​மை. 2027 அக்​டோபருக்​குள் தமிழகத்​தில் ஒரு லட்​சம் தகு​தி​யான தலை​வர்​களை உரு​வாக்​கு​வதே எனது இலக்​கு. தலை​வர்​களை உரு​வாக்​கிய பிறகு, மக்​களே நம்மை கட்சி தொடங்க அழைப்​பார்​கள். அப்​போது கட்சி தொடங்​கு​வோம். இதற்​காக கோவை​யில் ‘கலாம் எதிக்ஸ் மற்​றும் பாலிடிக்ஸ் மையம்’ அக்​.15-ம் தேதி திறக்​கப்பட உள்​ளது.

2027 அக்​டோபருக்கு பிறகு மிகப்​பெரிய மாநாடு நடத்த திட்​ட​மிட்​டுள்​ளோம். ஓரிரு மாதங்​களில், தஞ்​சாவூர், ராம​நாத​புரம், சென்னை உட்பட பல்​வேறு இடங்​களில் விவ​சா​யம், திறன் மேம்​பாட்டு மையங்​களை தொடங்க உள்​ளோம்.

அறிவு நிலை மாற்றம்: தமிழகத்​தில் 1960-ல் நடந்​தது உணர்ச்சி நிலை மாற்​றம். 2026-ல் நடந்​தது மயக்க நிலை மாற்​றம். 60 ஆண்​டு​களாக உடைக்க முடி​யாத ஒரு விஷ​யத்தை மயக்க நிலை மாற்​றம் உடைத்​திருக்​கிறது. இனி, அடுத்து நடக்​கக்​கூடிய அறிவு நிலை மாற்​றத்​துக்​காக நாம் பாடுபட வேண்​டும். தகு​தி​யானவர்​கள் எம்​எல்​ஏக்​களாக வரவேண்​டும்.

பாஜக​வில் பல முக்​கிய பொறுப்​பு​களை வகித்​து, நிறைய விஷ​யங்​களை​யும் செய்​தோம். கட்​சிக்​கும், எனக்​கும் எந்த பிரச்சினை​யும் கிடை​யாது. ஆனால், எந்தவித தாக்​க​மும் ஏற்​பட​வில்லை என்​பது​தான் வருத்​தம்.

தமிழகம் அறி​வு​சார் புரட்​சியை நோக்கி நகர வேண்​டும். லண்​டனில் இருக்​கும் தமிழர்​கள் தமிழகத்​துக்கு வெறும் பணத்தை மட்​டுமின்​றி, உங்​கள் அனுபவம், அறிவை​யும் பகிர வேண்​டும். தமிழக மாணவர்​கள் இங்​கிலாந்து பல்​கலைக்​கழகங்​களில் சேர வழி​காட்​டு​தல், திறன் மேம்​பாட்​டுப் பயிற்சி அளித்​தல் போன்​றவற்​றில்​ உதவ வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

SCROLL FOR NEXT