ேகாவை வந்த பிரதமரை வரவேற்க அளிக்கப்பட்ட பெயர் பட்டியல். இதில் அண்ணாமலை பெயர் இல்லை.

 
தமிழகம்

கோவை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: பட்டியலில் பெயர் இல்லாததால் அண்ணாமலை பங்கேற்கவில்லை

செய்திப்பிரிவு

கோவை: கேரள மாநிலம் பாலக்​காட்​டில் நடை​பெறும் பிரச்​சா​ரத்​தில் கலந்து கொள்​வதற்​காக, நேற்று கோவை விமான நிலை​யத்​துக்கு வந்த பிரதமர் மோடிக்கு பாஜக​வினர் உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

வரவேற்​பாளர் பட்​டியலில் பெயர் இல்​லாத​தால் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்​ணா​மலை​யால் பங்​கேற்க இயலாத நிலை ஏற்​பட்​டுள்ள​தாகத் தெரி​கிறது. கேரளா மாநிலத்​தில் வரும் 9-ம் தேதி சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது.

          

தேர்​தல் நெருங்​கு​வதைத் தொடர்ந்து அம்​மாநிலத்​தில் பாஜக தலை​வர்​கள் தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், கேரளா​வில் போட்​டி​யிடும் என்​டிஏ கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பாலக்காட்டில் பிரச்​சா​ரம் செய்​தார்.

முன்​ன​தாக இந்த பிரச்​சார நிகழ்​வில் கலந்து கொள்​வதற்​காக பிரதமர் மோடி புதுடெல்​லி​யில் இருந்து தனி விமானம் மூலம் புறப்​பட்டு நேற்று மதி​யம் 2 மணிக்கு கோவை பீளமேட்​டில் உள்ள சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு வந்​தார்.

அங்​கிருந்து தனி ஹெலி​காப்​டர் மூலம் பாலக்​காடு புறப்​பட்​டுச் சென்று பிரச்​சா​ரத்​தில் கலந்து கொண்​டார். பிரதமர் வரு​கை​யையொட்டி கோவை விமான நிலை​யத்​தில் மூன்​றடுக்கு பாது​காப்பு போடப்​பட்டிருந்தது.

கோவை விமான நிலை​யத்​துக்கு வந்த பிரதமர் மோடியை, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன், பாஜக தேசிய மகளிரணி தலை​வர் வானதி சீனி​வாசன், அதி​முக முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி, அதி​முக புறநகர் கோவை வடக்கு மாவட்ட செய​லா​ளர் பி.ஆர்​.ஜி.அருண்​கு​மார், அமமுக நிர்​வாகி​யும், முன்​னாள் அமைச்​சரு​மான சண்முகவேலு, ஐஜேக தலை​வர் பாரிவேந்​தர், தமாகா நிர்​வாகி ராஜேஸ்வரன் மற்​றும் பாஜக நிர்வாகிகள் கனகசபாபதி, ஏ.பி.முருகானந்தம், எஸ்.ஆர்.சேகர், நந்தகுமார், ரமேஷ்குமார், சந்திரசேகர், கருமாரிமுத்து, சதீஷ்குமார் வரவேற்​றனர்.

இந்​நிலை​யில் கோவை வந்த பிரதமரை வரவேற்​கும் நபர்​களின் பெயர் பட்​டியல் பாஜக​வில் இருந்து வழங்​கியதன் அடிப்​படை​யில் காவல்​துறை​யினர் மூலம் சரி​பார்க்​கப்​பட்டு அனு​மதி வழங்​கப்​பட்​டது. இதன்​படி பட்​டியலில் பெயர் இருந்​தவர்​கள் மட்​டுமே விமான நிலை​யத்​துக்​குள் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இந்த பட்​டியலில் பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை பெயர் இல்லை என்​பது தெரிய​வந்​துள்​ளது. இதனால் அவரால் பிரதமர் வரவேற்பு நிகழ்​வில் பங்​கேற்க முடி​யாத சூழல் ஏற்​பட்​டது.

அதே​நேரம் நேற்று அவர் கோவை​யிலும் இல்லை என்​ப​தா​லும் அவர் இந்​நிகழ்​வில் பங்​கேற்க முடி​யாமல் போன​தாகவும் தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

SCROLL FOR NEXT