தமிழிசைக்கு ஆதரவு கோரி பிரச்சாரம் செய்த அண்ணாமலை. படம்: எல் சீனிவாசன்

 
தமிழகம்

வெளிமாநில முதல்வர்​கள் திமுகவுக்கு பிரச்சாரம் செய்வது ஏன்? - அண்ணாமலை விளக்கம்

செய்திப்பிரிவு

“தமிழகம் வந்து திமுக​வுக்கு ஆதர​வாக பிரச்​சா​ரம் செய்​யும் வெளி​மாநில முதல்​வர்​கள் ஸ்டா​லின் மீண்​டும் முதல்​வ​ராக வேண்​டும் என்​ப​தற்​காக வரவில்​லை. தமிழகத்​திற்கு பாஜக வந்​து​விடக்​கூ​டாது என்​ப​தற்​காகவே வரு​கிறார்​கள்” என, தமிழக பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​தார்.

மயிலாப்பூர் தொகு​தி​யில் பாஜக சார்​பில் மூத்த தலை​வர் தமிழிசை போட்​டி​யிடு​கிறார். அவரை ஆதரித்து முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை நேற்று பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: தமிழக தேர்​தல் களத்​தில் இரண்டு வார காலத்​தில் மிகப்​பெரிய மாற்​றம் நிகழ்ந்​துள்​ளது. தே.ஜ. கூட்​ட​ணிக்கு ஆதர​வாக மிகப்​பெரிய அலை உரு​வாகி​யிருக்​கிறது.

அதே​நேரத்​தில் தமிழகம் முழு​வதும் திமுக மீது இருக்​கும் கோபம் வெளிப்பட ஆரம்​பித்​திருக்​கிறது. நாடாளு​மன்​றத்​தில் பெண்​களின் நலனுக்​காக கொண்​டு​வரப்​பட்ட 33 சதவீத இடஒதுக்​கீடு மசோ​தாவுக்கு எதி​ராக வாக்​களித்த திமுக​வுக்கு தேர்​தலில் தாய்​மார்​கள் தக்க பாடம் புகட்​டு​வார்​கள். தமிழகம் வந்து திமுக​வுக்கு ஆதர​வாக பிரச்​சா​ரம் செய்​யும் பிற மாநில முதல்​வர்​கள் ஸ்டா​லின் மீண்​டும் முதல்​வ​ராக வேண்​டும் என்​ப​தற்​காக வரவில்​லை. தமிழகத்​திற்கு பாஜக வந்​து​விடக்​கூ​டாது என்​ப​தற்​காகவே வரு​கிறார்​கள்.

ராகுல் காந்​தி, ஸ்டா​லின் இரு​வரும் ஒரே மேடை​யில் இணைந்து பிரச்​சா​ரம் செய்​ய​வில்​லை. திமுக கூட்​டணி கோவிலில் தேங்​காய் உடைக்​கும் போது சிதறு​வது போல சிதறிக் காணப்​படு​கிறது. தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணியை சேர்ந்த அனை​வரும் வெற்றி பெற்று பழனி​சாமி முதல்​வ​ராக பதவி​யேற்​பார். இவ்​வாறு அவர் பேசி​னார். தொடர்ந்து பேசிய தமிழிசை, “முதல்​வர் சூப்​பர் 6 என்ற சென்​னைக்​கான வாக்​குறு​தியை வெளி​யிட்​டுள்​ளார். இது சூப்​பர் சுருட்​டலுக்​கான முன்​னோட்​டம் என்​பதை நிச்​ச​யம் மக்​கள் புரிந்​து​கொள்​வார்​கள்​” என்​றார்.

SCROLL FOR NEXT