தமிழகம்

தீபத்தூண் விவகாரத்தில் அரசு முரண்பாடு: அண்ணாமலை குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: ‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை, தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது: கடந்த திமுக ஆட்சியின்கீழ் செயல்பட்ட இந்து சமய அறநிலையத் துறை, ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூண் சமணத் துறவிகளால் விளக்கேற்றுவதற்காக அமைக்கப்பட்டது’ என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவித்தது.

இதற்கு முன்பு, அந்த தூண் ஒரு நில அளவைக் கல் என்ற நிலைப்பாட்டை அறநிலையத்துறை எடுத்திருந்தது. ஆனால், தற்போதைய தவெக அரசு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வாதத்தில், அதே தீபத் தூண், ஒரு நில அளவைக் கல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே கட்டமைப்பு தொடர்பாக இரு நீதிமன்றங்களில் தமிழக அரசு முற்றிலும் முரண்பட்ட நிலைப்பாடுகளை எவ்வாறு எடுக்க முடியும்?

முந்தைய திமுக அரசோ, தற்போதைய தவெக அரசோ, இந்த விவகாரம் குறித்த தமிழக அரசின் புரிதலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய குறைபாடு அல்லது திட்டமிட்டு இந்த விவகாரத்தை தவறாக புரிந்து கொள்ளச் செய்யும் முயற்சியையே இது வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT