ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வரவேற்கிறார் தமிழக முதல்வர் விஜய்.
சென்னை: சென்னையை அடுத்த கோவளத்தில் நேற்று நடந்த தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், கூட்டு வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை மிகவும் அவசியம்.
எனவே, 2047-ம் ஆண்டுக்குள் 10 டிரில்லியன் டாலர் மதிப்பிலான தென்னிந்திய பொருளாதாரத்தை உருவாக்கவும், ‘விக்சித் பாரத்’ எனும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வலுவான வளர்ச்சி இயந்திரமாக தென்னிந்தியாவை உருவாக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பொதுவான தொலைநோக்குப் பார்வையுடன் ஒன்றிணைந்து செயல்பட்டால், தென்னிந்தியாவை உலகளாவிய பொருளாதார சக்தியாக மாற்ற முடியும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துக்கு நாம் தீர்க்கமான பங்களிப்பை வழங்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.