தமிழகம்

ஊழல் குற்றச்சாட்டு உள்ள அரசு அதிகாரிகளை ‘பிளாக் லிஸ்ட்’ செய்ய பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ஒவ்​வோர் ஆண்​டும் தமிழக அரசு நிதி​நிலை அறிக்​கையை வெளி​யிடு​வதற்கு முன்​பாக பாமக சார்பில் நிழல் நிதி​நிலை அறிக்கை வெளி​யிடப்​படு​வது வழக்​கம். அதன்​படி, கடந்த வாரம் வேளாண் நிழல் நிதி​நிலை அறிக்கை வெளி​யிடப்​பட்​டது.

தொடர்ந்​து, நேற்று பாமக தலை​வர் அன்​புமணி 2026-27-ம் ஆண்​டுக்​கான நிழல் நிதி​நிலை அறிக்​கையை வெளி​யிட்​டார். இந்த நிகழ்ச்​சியில் பொதுச்​செய​லா​ளர் வடிவேல் ராவணன், பொருளாளர் தில​க​பாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அந்த நிதி​நிலை அறிக்​கை​யில், சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்​துதல், போதை இல்​லாத மாநில​மாக தமிழகத்தை மாற்​று​தல், பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் பாது​காப்பை உறுதி செய்​தல், அடுத்த 4 ஆண்​டு​களில் 6 லட்​சம் பேருக்கு அரசு வேலை வாய்ப்​பு, வேளாண்​மையை லாபம் தரும் தொழிலாக மாற்​று​தல் உள்​ளிட்​ட​வற்​றுக்கு முன்​னுரிமை அளிக்​கப்பட வேண்​டும் என தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

ஒட்​டுமொத்​த​மாக 380 திட்​டங்​கள் நிழல் நிதி​நிலை அறிக்​கை​யில் இருந்தன. இதன் பின்​னர் நிருபர்​களிடம் அன்​புமணி தெரி​வித்​த​தாவது: 2026-27 நிதி​யாண்​டில் தமிழ்​நாட்​டின் வரு​வாய் ரூ.6,71,891 கோடி​யாக இருக்​கும். கனிம வளங்​களை சிறப்​பான முறை​யில் கையாளுவதன் மூலம் வரி அல்​லாத வரு​வா​யாக ரூ.2,17,945 கோடி ஈட்ட முடி​யும்.

தமிழகத்​தில் ஊழல் குற்​றச்​சாட்​டு​களுக்கு உள்​ளானவர்​களை சிறப்பு நீதி​மன்​றம் மூலம் தண்​டிக்​கும் அதி​காரத்தை லோக் அயுக்தா அமைப்​புக்கு வழங்​கி, சட்​டத்​திருத்​தம் செய்​யப்பட வேண்​டும்.

மதுரை, கோவை உள்​ளிட்ட மாநகரங்​களில் மெட்ரோ திட்​டத்​துக்கு மத்​திய அரசு மீண்​டும் அனு​மதி மறுத்​துள்​ளது. இந்த விவ​காரத்​தில் தமிழக அரசு மத்​திய அரசுக்கு தொடர் அழுத்​தம் கொடுக்க வேண்​டும்.

மேகே​தாட்டு தொடர்​பாக கர்​நாடக அரசிடம் முதல்​வர் விஜய் பேச்​சு​வார்த்தை நடத்​து​வது அவசி​யம் இல்​லாதது. இதனை சட்​டப்​படி அணுக வேண்​டும். கடந்த திமுக ஆட்​சி​யில் ரூ.6 லட்​சம் கோடி வரை ஊழல் நடை​பெற்​றுள்​ளது. தற்​போதைய அரசு திமுக​வின் ஊழல் மீது கவனம் செலுத்த வேண்​டும். அரசு அதி​காரி​கள் மற்​றும் ஊழல் குற்​றச்​சாட்​டுக்கு உள்​ளானவர்​களை `பிளாக் லிஸ்ட்' செய்ய வேண்​டும் என்று​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT