சேலத்​தில் ராம​தாஸ் தலை​மை​யில் நடை​பெறவுள்ள பொதுக்​குழுக் கூட்​டத்​துக்கு அனு​மதி வழங்​கக் கூடாது என்று வலி​யுறுத்தி மாநகர காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் மனு அளிக்க வந்த அன்​புமணி ஆதர​வாளர்கள்.

 
தமிழகம்

ராமதாஸ் தலைமையில் சேலத்தில் நடைபெறும் பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது: அன்புமணி தரப்பினர் மனு

செய்திப்பிரிவு

சேலம்: சேலத்​தில் வரும் 29-ம் தேதி பாமக நிறு​வனர் ராமதாஸ் தலை​மை​யில் நடை​பெறவுள்ள பொதுக்​குழு மற்​றும் செயற்​குழுக் கூட்​டத்​துக்கு அனு​மதி வழங்​கக் கூடாது என்று வலி​யுறுத்​தி, அன்​புமணி தரப்​பினர் காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் மனு அளித்​தனர்.

சேலத்​தில் பாமக நிறு​வனர் ராமதாஸ் தலை​மை​யில் கட்சியின் பொதுக்​குழு மற்​றும் செயற்​குழுக் கூட்​டம் வரும் 29-ம் தேதி நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தக் கூட்​டத்​துக்கு பாமக பெயரில் அனு​மதி வழங்​கக் கூடாது என்று அன்​புமணி தரப்பை சேர்ந்த மாநில ஒருங்​கிணைப்​பாளர் கார்த்​தி, மேட்​டூர் எம்​எல்ஏ சதாசிவம் தலை​மையி​லான நிர்​வாகி​கள், சேலம் மாநகர காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் மனு அளித்​தனர்.

இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் கார்த்தி கூறிய​தாவது: பாமக தலை​வர் அன்​புமணி​தான் என்று நீதி​மன்​றத்​தில் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. பொதுக்​குழு​வைக் கூட்​ட​வும், தலைமை ஏற்​க​வும் அன்​புமணி​யைத் தவிர வேறு யாருக்​கும் அதி​காரம் இல்​லை.

கட்​சி​யின் சார்​பாக எந்த அனு​ம​தி​யும், பாது​காப்​பும் நாங்​கள் கேட்​க​வில்​லை. பாமக பெயரை தவறாகப் பயன்​படுத்தி அனு​மதி கேட்​டால், அது சட்​ட​விரோத​மானது.

பாமக​வின் பெயரையோ, கொடியையோ, அடை​யாளங்​களையோ தவறாகப் பயன்​படுத்​தும் நபர்​கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்​டும். இது தொடர்​பாக மாநகர காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் தலை​மை​யில் நடை​பெறும் செயற்​குழு, பொதுக்​குழுக் கூட்​டத்​தில் எடுக்​கப்​படும் முடிவு​கள் எது​வும் செல்​லாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT