தமிழகம்

​திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலம் ஒப்பந்தம்: ரூ.700 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை - அன்புமணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: திரு​வான்​மியூர் - உத்​தண்டி உயர்​மட்ட பாலம் ஒப்​பந்​தம் ரத்து செய்​யப்​படு​வது வரவேற்​கத்​தக்​கது. ரூ.700 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திரு​வான்​மியூர் - உத்​தண்டி இடையே 4 வழி உயர்​மட்ட பாலத்தை ரூ.1,400 கோடி​யில் கட்​டித் தரு​வ​தாக மத்​தி​யப் பிரதேசத்தை சேர்ந்த திலிப் பில்ட்​காப் என்ற நிறு​வனம் ஒப்​பந்​தப்​புள்ளி அளித்​திருந்​தது.

அந்த நிறு​வனத்​துக்கு ஒப்​பந்​தம் வழங்​காமல், ரூ.2,100 கோடிக்கு ஒப்​பந்​தப்​புள்ளி வழங்​கி​யிருந்த ஐதரா​பாத்​தைச் சேர்ந்த கே.என்​.ஆர்​.கன்​ஸ்ட்​ரக் ஷன்ஸ் நிறு​வனத்​துக்கு கடந்த டிசம்​பர் 24-ம் தேதி ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த ஒப்​பந்​தத்தை ரத்து செய்​வது குறித்து தற்​போதைய அரசு ஆய்வு செய்து வரு​வ​தாக வெளி​யாகி​யுள்ள செய்​தி​கள் மகிழ்ச்​சி​யளிக்​கின்​றன. மக்​களின் வரிப்​பணம் ரூ.700 கோடியை ஊழல் மூலம் சுரண்​டும் இந்த ஒப்​பந்​தம் ரத்து செய்​யப்​படு​வது வரவேற்​கத்​தக்​க​தாகும்.

கடந்த ஆட்​சி​யில் இதன் பின்​னணி​யில் இருந்த அமைச்​சர்​கள், அதி​காரி​கள் உள்​ளிட்ட அனை​வருமே தண்​டிக்​கப்பட வேண்​டிய​வர்​கள்​தான். எனவே எந்​தத் தயக்​க​மும் இல்​லாமல் திரு​வான்​மியூர் - உத்​தண்டி உயர்​மட்ட பாலம் திட்​டத்தை செயல்​படுத்த வழங்​கப்​பட்ட ஒப்​பந்​தத்தை உடனடி​யாக ரத்து செய்ய வேண்​டும்.

இந்த ஒப்​பந்​தத்​தின் பின்​னணி​யில் நடந்த ஊழல்​கள் மற்​றும் முறை​கேடு​கள் குறித்து சிபிஐ வி​சா​ரணைக்கு தமிழக அரசு ஆணை​யிட வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT