தமிழகம்

மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகம் தீவிரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: மேகேதாட்டு அணை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியிருப்பது கவலை அளிக்கிறது.

மத்திய நீர்வளத் துறை அமைச்சராக இருந்த உமாபாரதி, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், அதை திருப்பி அனுப்புவோம் என்று தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு பிறகு வந்தவர்கள் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமலேயே விரிவான திட்ட அறிக்கையை ஆய்வுக்கு எடுத்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல, மேகேதாட்டு அணைக்கும் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளிக்கப்பட்டால், அரசு என்ன செய்யும்?

கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, சுவர்னவதி ஆகிய அனைத்து அணைகளும் தமிழகத்தை திமுக ஆட்சி செய்தபோது கட்டப்பட்வைதான். அந்தப் பட்டியலில் மேகேதாட்டு அணையும் இணைந்து விடக்கூடாது. எனவே, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் ஆராய வேண்டும். அதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.

SCROLL FOR NEXT