தமிழகம்

தனியார் பள்ளிகளிடம் ரூ. 100 கோடி வசூலித்த விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் மனு

செய்திப்பிரிவு

சென்னை: தனி​யார் பள்​ளி​களுக்கு அங்​கீ​காரம் வழங்க ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்​த​தாக தனக்கு எதி​ராக பதி​யப்​பட்​டு்ள்ள வழக்கை ரத்து செய்​யக்​கோரி திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் தாக்​கல் செய்​துள்ள மனு உயர் நீதி​மன்​றத்​தில் நாளை விசா​ரணைக்கு வரவுள்​ளது.

இந்த வழக்​கில் ஏற்​கெனவே கைதாகி​யுள்ள பி.டி. அரசகு​மார் மீதான குண்​டர் தடுப்​புச்​சட்ட உத்​தரவை உயர் நீதி​மன்​றம் ரத்து செய்​துள்​ளது.

முந்​தைய திமுக ஆட்​சி​க் காலத்​தில் தமிழகத்​தில் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தனி​யார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம் உள்​ளிட்ட பிற சட்​டப்​பூர்வ அனு​ம​தி​களைப் பெற்​றுத்​ தரு​வ​தாகக்​கூறி திமுக நிர்​வாகி​யான பி.டி.அரசகுமார் உள்​ளிட்​டோர் ரூ. 100 கோடிக்கு மேல் சட்​ட​விரோத​மாக வசூலித்​துள்​ள​தாக பள்ளி நிர்​வாகி​கள் சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸில் புகார் அளித்​தனர்.

அதன்​பேரில் திமுக முன்​னாள் அமைச்​ச​ரான அன்​பில் மகேஸ் மற்​றும் திமுக நிர்​வாகி​யும், தனி​யார் பள்​ளி​கள் சங்​கம் மற்​றும் பெற்​றோர் ஆசிரியர் சங்​கத் தலை​வ​ரான பி.டி.அரசகு​மார், முன்​னாள் எம்​எல்ஏ முத்​துக்​கு​மார், சுரேஷ், ராஜா உள்​ளிட்​டோர் மீது போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்.

இதில் பி.டி.அரசகு​மார் கைது செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில், போலீ​ஸார் கடந்த செப்​.16 அன்று அன்​பில் மகேஸின் வீடு மற்​றும் அலு​வல​கங்​கள், அவரது உறவினர்​களின் வீடு​கள் உள்பட 9 இடங்​களில் சோதனை நடத்தி முக்​கிய ஆவணங்​களை பறி​முதல் செய்​தனர்.

அதன்​பேரில் போலீ​ஸார் கடந்த செப்​.18 அன்று அன்​பில் மகேஸிடம் விசா​ரணை நடத்​தினர். இந்​நிலை​யில், தனக்கு எதி​ராக 4 பிரிவு​களின் கீழ் பதி​யப்​பட்​டுள்ள இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி அன்​பில் மகேஸ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனு நீதிபதி வி. லட்​சுமி நாராயணன் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, அன்​பில் மகேஸ் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ரிச்​சர்ட்​சன் வில்​சன், வழக்​கின் எப்​ஐஆர் நகல் கிடைக்​கப்​பெற​வில்லை என்​ப​தால், அந்த நகல் இல்​லாமல் இந்த மனுவை விசா​ரணைக்கு ஏற்க வேண்​டும் எனக்​கோரி​னார்.

அதையேற்ற நீதிப​தி, இந்த மனு மீதான நடை​முறை​களை முடித்​து, செப்​.30 (நாளை) வி​சா​ரணைக்கு பட்​டியலிட பதிவுத்​துறைக்​கு உத்​தர​விட்​டுள்​ளார்​.

அரசகுமார் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவு ரத்து

ரூ.100 கோடிக்கு மேல் பண வசூலில் ஈடு​பட்​ட​தாக கைதான பி.டி. அரசகு​மாரை குண்​டர் தடுப்​புச்​சட்​டத்​தின் கீழ் சிறை​யில் அடைத்து சென்னை காவல் ஆணை​யர் கடந்த ஜூலை 11 அன்று உத்​தர​விட்​டார்.

தனது கணவர் மீதான குண்​டர் தடுப்​புச்​சட்ட உத்​தரவை ரத்து செய்​யக்​கோரி அரசகு​மாரின் மனைவி கோகிலா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தார்.

அந்த மனுவை நேற்று விசா​ரித்த நீதிப​தி​கள் என்​.சதீஷ்கு​மார், கே. ராஜ சேகர் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, பி.டி.அரசகு​மார் மீதான குண்​டர் தடுப்​புச்​சட்ட உத்​தரவை ரத்து செய்து உத்​தர​வி்ட்​டுள்​ளது​.

SCROLL FOR NEXT