தமிழகம்

ரூ.400 கோடி முறைகேடு வழக்கில் அன்பில் மகேஸ் ஜாமீன் மனு 17-க்கு தள்ளி வைப்பு

முத்துக்குமாருக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்

செய்திப்பிரிவு

சென்னை: ரூ. 400 கோடி முறைகேடு வழக்​கில் கைதாகி சிறையில் உள்ள திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மேல்​முறையீட்டு மனு, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

போலீஸ் தரப்​பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்​றவியல் வழக்​கறிஞர் ஆர். ஜான் சத்​யன், “இந்த வழக்​கில் சரணடைந்​துள்ள முன்​னாள் எம்​எல்ஏ முத்​துக்​குமாரைக் காவலில் எடுத்து விசா​ரிக்​கவுள்​ளோம். மற்​றொரு நபர் கார் ஓட்​டுநர் சரவணனும் நீதி​மன்​றத்​தில் சரண் அடைந்​துள்​ளார்.

எனவே இந்த ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்​டும்” என்று வேண்​டுகோள் விடுத்​தார். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி, “சிறை​யில் உள்ள அன்​பில் மகேஸூக்கு ஜாமீன் கோரும் மனு நவ.17 அன்று விசா​ரிக்​கப்​படும்.

நவ.16-க்​குள் இந்த மனுவுக்கு போலீ​ஸார் பதிலளிக்க வேண்​டும்” என்று உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளி வைத்​துள்​ளார்.

இந்த வழக்​கில் சிறப்பு நீதி​மன்​றத்​தில் கடந்த அக்.29 அன்று சரணடைந்த, தற்​போது திமுக​வில் உள்ள விருத்​தாச்​சலம் தொகுதி முன்​னாள் எம்​எல்ஏ வி.முத்​துக்​குமாரை 5 நாட்​கள் தங்கள் காவலில் விசா​ரிக்க அனுமதி கோரி சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தனர்.

நவ.16 வரை காவல்

அந்த மனுவை விசா​ரித்த சிறப்பு நீதிபதி எல்.எஸ்.சத்​தி​யமூர்த்தி, சிறை​யில் உள்ள முத்​துக்​குமாரை 4 நாட்​களுக்கு போலீ​ஸார் தங்​களது காவலில் எடுத்து விசா​ரிக்க அனுமதி வழங்கி நேற்று உத்​தர​விட்​டார்.

அதன்​படி நவ.16-ம் தேதி காலை முத்​துக்​குமாரை மீண்​டும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்த போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டுள்ள நீதிபதி, அவரை மனதளவிலோ உடல் அளவிலோ துன்​புறுத்​தக் கூடாது.

வழக்​கறிஞரை சந்​திக்க அனுமதிக்க வேண்​டும் என்று உத்​தர​விட்டு முத்​துக்​குமாரின் நீதி​மன்ற காவலை நவ.26 வரை நீட்​டித்​துள்​ளார்.

ரூ.4.5 கோடி முடக்கம்

தனியார் பள்​ளி​களுக்கு அங்​கீகாரம் அளிக்க லஞ்​சம் பெற்​றது தொடர்​பான வழக்​கில் முன்​னாள் எம்​எல்ஏ முத்​துக்​குமாரின் 29 வங்​கிக் கணக்​கு​களை சென்னை மத்​திய குற்​றப் பிரிவு போலீ​ஸார் முடக்கி உள்​ளனர்.

அதி​லிருக்​கும் ரூ.4.5 கோடி பணத்​தையும் சென்னை மத்​திய குற்​றப் பிரிவு போலீ​ஸார் முடக்​கி​யுள்​ளனர். இதே வழக்​கில் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸின் வங்​கிக் கணக்​கு​களை​யும் காவல் துறை​யினர் முடக்​கவுள்​ள​தாக தகவல்​கள் வெளியாகி​யுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT