டிடிவி தினகரன் | கோப்புப் படம் 
தமிழகம்

அமமுகவில் டிச.10 முதல் விருப்ப மனு: டிடிவி தினகரன் அறிவிப்பு

வெற்றி மயிலோன்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியிட விரும்புபவர்கள் டிசம்பர் 10 முதல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 10.12.2025 (புதன்கிழமை) முதல் 18.12.2025 (வியாழக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அடையாறில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT