சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், பாஜக தேசியத் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இதன்படி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ள யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் ஜன. 9-ம் தேதி புதுக்கோட்டைக்கு வருகிறார் என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உட்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பர் என்றும் பாஜக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.