சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் திருத்தம் செய்து, பெரியார், அம்பேத்கர், நேரு ஆகியோர் பெயர்களை சேர்த்து, திருத்தப்பட்ட கொள்கை விளக்க குறிப்பை சட்டப்பேரவையில் அமைச்சர் சம்பத் குமார் நேற்று வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் கடந்த ஆக.27-ம் தேதி வெளியிடப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில், இடஒதுக்கீடு என்ற பகுதியில் பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்களை நீக்கியதாக திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் குற்றம்சாட்டி, மீண்டும் பெயர்களை சேர்க்க வலியுறுத்தினர்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் திருத்தப்பட்ட கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் சம்பத்குமார் நேற்று வெளியிட்டார்: இட ஒதுக்கீடு வழங்கும் போதுவளமான பிரிவினர் (கிரீமிலேயர்) என்பதை நீக்கும் கொள்கையை தமிழக அரசு கொண்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோர் வளர்ச்சியை உறுதி செய்ய 45 மத்திய பல்கலைக்கழகங்களில், மத்திய கல்வி நிறுவனங்களில், அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்றவற்றில் மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்
பட்டோருக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.
மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டின் அளவு வேறுபடும்.
எனவே மாநிலங்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு சதவீதத்தை நிர்ணயிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளுக்கே இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப இந்திய அரசமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.
சமூக நீதியை நிலைநாட்டு வதில் அம்பேத்கர், நேரு, பெரியார், அண்ணா, வி.பி.சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகள் போற்றத் தக்கவையாகும்.
தமிழக அரசு சமூக நீதி பாதுகாப்பில் உறுதியாக இருப்பதுடன் மக்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கு அரும்பாடுபட்ட அனைத்து தலைவர்களையும், அவர்களின் பங்களிப்பையும் என்றும் போற்றி வணங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசும்போது, ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கியவர். அவர் பெயரையும் கொள்கை விளக்க குறிப்பில்சேர்க்க வேண்டும்’ என்றார்.
ஜெயலலிதாவின் பங்களிப்பு குறித்து பதிவு செய்துகொள்வதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.