அமல்ராஜ் ஐபிஎஸ் | கோப்புப் படம்

 
தமிழகம்

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்

வெற்றி மயிலோன்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ்ஸை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தவெக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில், இன்று தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக் மாற்றப்பட்டு, புதிய ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, சென்னை பெருநகர ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோடக், சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் சென்னை பெருநகர ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் மாற்றப்பட்டு, அபின் தினேஷ் மொடக் தேர்தல் ஆணையத்தால் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT