தமிழகம்

சொத்து வரி 10 மடங்குக்கு மேல் உயர்ந்ததாக குற்றச்சாட்டு: வட்டார துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்ய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ​மாநக​ராட்​சி​யில் சொத்து வரி 10 மடங்​குக்கு மேல் உயர்ந்​த​தாக சொத்து உரிமை​யாளர்​கள் குற்​றம்​சாட்டி வரும் நிலை​யில், மாநக​ராட்சி வட்​டார துணை ஆணை​யரிடம் மேல்​முறை​யீடு செய்து தீர்​வைப் பெறலாம் என மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

சென்னை மாநக​ராட்சி சார்​பில் கடந்த ஆண்​டு​களில் மேற்​கொள்​ளப்​பட்ட சுய-அறி​விப்பு (Self-Declaration) நடவடிக்​கை​யின்​போது, சொத்து உரிமை​யாளர்​கள் தங்​கள் சொத்​துகளின் பயன்​பாடு மற்​றும் கட்​டிடப் பரப்பு குறித்த விவரங்​களை வழங்​கியதன் அடிப்​படை​யில், சொத்​து​வரி மதிப்​பீட்​டில் திருத்​தம் செய்​யும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

கரோனா பெருந்​தொற்று காரண​மாக மறும​திப்​பீடு செய்​யும் பணி​கள் கைவிடப்​பட்​டது. சொத்து உரிமை​யாளர்​கள் வழங்​கிய விவரங்​கள் மற்​றும் கிடைக்​கப்​பெற்ற மறுஅளவீடு, புவி​சார் தகவல் அமைப்​பு, செயற்​கைக்​கோள் படத் தரவு​களின் அடிப்​படை​யில் சொத்து வரி மதிப்​பீடு​களைத் திருத்​தும் பணியை தற்​போது மாநக​ராட்சி மேற்​கொண்​டுள்​ளது.

அதனடிப்​படை​யில் சொத்து வரி மதிப்​பீ​டானது, சொத்​தின் சரி​யான பயன்​பாடு மற்​றும் கட்​டிட பரப்​பளவை உறுதி செய்​வதற்​கும், அனைத்து சொத்​துகளி​லும் நியாய​மான மற்​றும் சரி​யான மதிப்​பீட்டை உறுதி செய்​வதற்​கும் இந்​தத் திருத்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

சொத்து உரிமை​யாளர்​களுக்கு ஏற்​படும் நிதிச் சுமையை குறைக்​கும் முக​மாக, கட்​டிட​மானது கட்​டப்​பட்ட காலத்தை கருத்​தில் கொள்​ளாமல் சொத்​து​வரி மறும​திப்​பீடு கணக்​கீடு 2025-26 ஆண்​டின் 2-ம் அரை​யாண்​டிலிருந்து மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது என மாநக​ராட்சி அறி​வித்​துள்​ளது.

இதற்​கிடை​யில் மாநக​ராட்​சி​யின் துல்​லிய மதிப்​பீடு காரண​மாக சொத்து உரிமை​யாளர்​களுக்கு இதற்கு முன்பு செலுத்தி வந்​ததை விட பல மடங்கு சொத்துவரி அதி​கரித்​திருப்​ப​தாக புகார் எழுந்​துள்​ளது.

இது தொடர்​பாக வட சென்னை குடி​யிருப்​போர் நலச்​சங்​கங்​களின் கூட்​டமைப்பு தலை​வர் டி.கே.சண்​முகம் கூறும்​போது, “வட சென்​னை​யில் ஒரு சொத்​தின் உரிமை​யாளர் இது​வரை அரை​யாண்​டுக்கு ரூ.295 செலுத்தி வந்​தார்.

இப்​போது ரூ.3255 ஆக உயர்த்தி மாநக​ராட்சி கடிதம் அனுப்​பி​யுள்​ளது. இதை கடந்த நிதி​யாண்​டின் 2-ம் அரை​யாண்டு முதல் செலுத்த வேண்​டும் என கூறி​யுள்​ளது.

இதன்​படி, கடந்த நிதி​யாண்​டின் 2-ம் அரை​யாண்​டு, நடப்பு நிதி​யாண்​டின் முதல் அரை​யாண்​டு, அக்​டோபரில் 2-ம் அரை​யாண்டு என ஒரு பெரிய தொகையை ஒரு நடுத்தர சொத்து உரிமை​யாள​ரால் எப்​படி செலுத்த முடி​யும்.

இந்த சொத்து வரி உயர்​வில் வெளிப்​படைத்​தன்மை இல்​லை” என்​றார். இது தொடர்​பாக மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மாநக​ராட்​சி​யில், ஏற்​கெனவே குறை​வாக மதிப்​பீடு செய்​யப்​பட்டு அதன் அடிப்​படை​யில் சொத்​து​வரி செலுத்தி வருபவர்​களுக்கு உரிய தரவு​களின் அடிப்​படை​யில், திருத்​திய மதிப்​பீடு செய்து அறி​விப்பு வழங்​கப்​பட்​ட​வர்​கள், அதன் மீது ஆட்​சேபனை இருப்​பின் 15 நாட்​களுக்​குள் சம்​பந்​தப்​பட்ட வட்​டார துணை ஆணை​யருக்கு மேல்​முறை​யீடு செய்ய வாய்ப்​பளித்து நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

30 நாட்​களுக்​குள் தீர்வு காணப்​படும். எனவே மாநக​ராட்​சி​யில் சொத்து வரி உயர்த்​தப்​பட்​டுள்​ள​தாக வரும் உண்​மைக்கு மாறான செய்​தி​களை மக்​கள் நம்ப வேண்​டாம். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT