கோப்புப் படம்

 
தமிழகம்

ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட கோரி அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் நாளை வேலைநிறுத்தம்

செய்திப்பிரிவு

சென்னை: ஐடிபிஐ வங்​கியை தனி​யார்​மய​மாக்​கும் முயற்​சியை கைவிடு​வது உள்பட பல்​வேறு முக்​கிய கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, நாளை (செப்​.11) வேலை நிறுத்​தத்​தில் ஈடுபட உள்​ள​தாக அகில இந்​திய வங்கி அதி​காரி​கள் சங்​கம் அறி​வித்​துள்​ளது.

சென்​னை​யில், அகில இந்​திய வங்கி அதி​காரி​கள் சங்​கத்​தின் தமிழ்​நாடு மாநிலக் குழு தலை​வர் ஜவஹர், பொதுச்​செய​லா​ளர் ஜெ.ரோஷன் கார்க்​கி, தலை​வர் விவேக்​ராஜா ஆகியோர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஐடிபிஐ வங்​கியை தனி​யார்​மய​மாக்​கு​வதை தடுப்​பது முக்​கியக் கோரிக்​கை​யாகும்.

2026-ம்ஆண்டு மார்ச் வரையி​லான நிதி​யாண்டு முடி​வில், ஐடிபிஐ வங்​கி​யின் மொத்த வர்த்​தகம் ரூ.5 லட்​சத்து 50 ஆயிரத்து 494 கோடி​யாக​வும், செயல்​பாட்டு லாபம் ரூ.10,837 கோடி​யாக​வும், நிகரலாபம் ரூ.9,514 கோடி​யாக​வும் உள்​ளது.

கடன் பாது​காப்பு வகிதம் 100 சதவீத​மாக உள்​ளது. 2003-ம்ஆண்டு டிசம்​பரில் நாடாளு​மன்​றத்​தில், ஐடிபிஐ வங்​கி​யில் அரசின் பங்கு குறை​யாது எனக் கூறப்​பட்​டது.

ஆனால், தற்​போது, அரசும், எல்​ஐசி​யும் சேர்ந்து தங்​களது 60.72 சதவீத பங்​கு​களை வெளி​நாட்டு முதலீட்​டாளர்​களுக்கு விற்க முயல்​வது நாடாளு​மன்ற உறு​தி​மொழியை மீறும் செய​லாகும். சந்​தை​யில் இருந்தோ அல்​லது எல்​ஐசி​யில் இருந்தோ 6 சதவீத பங்​கு​களை அரசு மீண்​டும் பெற்​று, ஐடிபிஐ வங்கியை முழு​மை​யாக பொதுத்​துறை நிறு​வன​மாக தொடர செய்ய வேண்​டும்.

அனைத்து ஊழியர்​களுக்​கும் விகி​தாச்​சார அடிப்​படை​யில் பிஎல்ஐ (லாபத்​தின் அடிப்​படை​யில் இணைப்பு ஊக்​கத்​தொகை) சமமாக வழங்க வேண்​டும். வாரத்​தில் 5 நாட்​களுக்கு வேலை திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும்.

இக்​கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, வரும் 11-ம் தேதி ஒரு​நாள் வேலைநிறுத்​த​மும், செப். 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 நாட்​கள்வேலைநிறுத்​த​மும் மேற்​கொள்​ளப்பட உள்​ளது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

SCROLL FOR NEXT