ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் தேசியப் பொதுக்குழுக் கூட்டத்தையொட்டி கோவை டாடாபாத் பகுதியில் நேற்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோர்.

 
தமிழகம்

தொழிலாளர் நல சட்டங்களை மீண்டும் அமல்படுத்துக: ஏஐடியுசி கட்டுமானத் தொழிற்சங்கம் தீர்மானம்

செய்திப்பிரிவு

கோவை: கட்​டு​மானத் தொழிலாளர் சட்​டங்​களை மீண்​டும் அமல்​படுத்த வேண்​டும் என்று கோவை​யில் நேற்று தொடங்​கிய ஏஐடி​யுசி கட்​டு​மானத் தொழிலாளர் சங்​கத்​தின் தேசி​யப் பொதுக்​குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

ஏஐடி​யுசி கட்​டு​மானத் தொழிலாளர் சங்​கத்​தின் 2 நாள் தேசி​யப் பொதுக்​குழுக் கூட்​டம் கோவை​யில் நேற்று தொடங்​கியது. இதையொட்​டி, டாடா​பாத் ஜீவா மன்​றம் அரு​கி​லிருந்து புறப்​பட்ட பேரணி​யை, தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத் தலை​வர் சு.பழனி​சாமி தொடங்கி வைத்​தார்.

          

ஏஐடி​யுசி தேசிய செய​லா​ளர் வகிதா நிஜாம், கட்​டிடத் தொழிலாளர் சங்​கத்​தின் அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் விஜயன் குனுச்​சேரி, ஏஐடி​யுசி மாநிலத் தலை​வர் காசி விஸ்​வ​நாதன், பொதுச் செய​லா​ளர் ராதாகிருஷ்ணன், கட்​டிடத் தொழிலா​ளர் சங்​கத்​தின் மாநிலப் பொதுச் செய​லா​ளர் செல்​வ​ராஜ் முன்​னிலை வகித்​தனர்.

இந்​தப் பேரணி சித்​தாபுதூர் விகேகே மேனன் சாலை​யில் நிறைவடைந்​தது. தொடர்ந்து நடை​பெற்ற தேசி​யப் பொதுக்​குழுக் கூட்​டத்​தில், மத்​திய அரசால் கலைக்​கப்​பட்ட கட்​டு​மான தொழிலாளர் சட்​டங்​களை மீண்​டும் அமல்​படுத்த வேண்​டும். ஏற்​கெனவே இருந்த 44 தொழிலாளர் சட்​டங்​களை அமல்​படுத்த வேண்​டும்.

தொழிலாளர்களுக்கு எதி​ராக இருக்​கும் புதிய 4 சட்​டத் தொகுப்​பு​களை திரும்​பப் பெற வேண்​டும். தமிழ்​நாடு, கேரள மாநிலங்​களில் கட்​டு​மானத் தொழிலாளர்களின் நலவாரி​யத்தை சிதைக்​கும் வகை​யில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​களை நீக்க வேண்​டும்.

தேசிய ஊரக வேலை உறு​தித் திட்​டத்​தின் பெயரில் நீக்​கப்​பட்​டுள்ள மகாத்மா காந்​தி​யின் பெயரை சேர்க்க வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. மேலும், வரும் பிப். 12-ம் தேதி மத்​திய அரசுக்கு எதி​ராக நடை​பெற உள்ள பொது வேலை

நிறுத்த போராட்​டத்​தில் கட்டு​மான தொழிலாளர்கள் திரளாகப் பங்​கேற்​பது என்று இக்​கூட்​டத்​தில்​ முடிவு செய்​யப்​பட்​டது.

SCROLL FOR NEXT