தமிழகம்

பணி நியமனத்தில் ரூ.634 கோடி முறைகேடு: கே.என்.நேரு சகோதரரின் உதவியாளர் கைது

லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: பணி நியமனங்​களில் ரூ.634 கோடி முறைகேடு நடந்​த​தாக கூறப்​படும் புகாரில் திமுக முன்​னாள் அமைச்​சர் கே.என்.நேரு சகோ​தரரின் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் கைது செய்​தனர்.

கடந்த திமுக ஆட்​சி​யில் நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் 2,538 பணி​யிடங்​களை நிரப்​பியதில் ரூ.634 கோடி அளவுக்கு லஞ்​சம் பெறப்​பட்​ட​தாக தமிழக லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு மத்​திய அரசின் அமலாக்​கத் துறை கடிதம் அனுப்​பியது.

இதையடுத்து, முன்​னாள் அமைச்​சர் கே.என்.நேரு உள்​ளிட்​டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்​பு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நேரு தாக்​கல் செய்த சீராய்வு மனு தள்​ளு​படி செய்​யப்​பட்​டது.

இதன் தொடர்ச்​சி​யாக, நேரு தொடர்​புடைய இடங்​கள் உட்​பட 25 இடங்​களில் லஞ்ச ஒழிப்​பு போலீ​ஸார் கடந்த அக்.29-ம் தேதி சோதனை நடத்​தினர். இதில் 170 ஆவணங்கள், 13 மின்​னணு சாதனங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன.

இதற்​கிடையே, நவ.2-ம் தேதி உச்ச நீதி​மன்​றமும் நேரு​வின் மேல்​முறையீட்டு மனுவை தள்​ளு​படி செய்​தது. இத​னால், ரூ.634 கோடி முறைகேடு புகார் தொடர்​பான விசா​ரணை தீவிரமடைந்​தது.

இந்​நிலை​யில், ஊழல் குற்​றச்​சாட்​டில் நேரு சகோ​தரர் கே.என்.ரவிச்​சந்​திரனின் உதவியாளர் கவி பிரசாத்தை லஞ்ச ஒழிப்​புத்துறை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

கடந்த செப்​டம்​பர் மாதம் வெளி​நாடு செல்ல முயன்​றபோது, சென்னை விமான நிலை​யத்​தில் இவரை குடியுரிமை அதி​காரி​கள் தடுத்து நிறுத்​தினர். பின்​னர் அவர் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸாரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டார். அப்​போது விசா​ரணை நடத்​தப்​பட்டு விடுவிக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில், தற்​போது கிடைத்​துள்ள கூடுதல் தகவல்​கள், ஆதா​ரங்​களின் அடிப்​படையில், சென்​னை​யில் அவரை லஞ்ச ஒழிப்​பு போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். தொடர்ந்து விசா​ரணை நடந்து வரு​கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT