தமிழகம்

காலியாக உள்ள 6 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது: தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

செய்திப்பிரிவு

சென்னை: ‘தமிழகத்​தில் காலி​யாக உள்ள 6 தொகு​தி​களில் இடைத்தேர்தல் நடத்​தக்​கூ​டாது’ என தேர்​தல் ஆணை​யத்​தில் அதி​முக சார்​பில் நேற்று மனு அளிக்​கப்​பட்​டது. அதி​முக எம்​எல்​ஏக்​கள் 6 பேர் தங்​கள் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில் அவர்​கள் ராஜி​னாமா செய்த தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் நடத்​தக்​கூ​டாது என்று அதி​முக சார்​பில், கட்​சி​யின் வழக்​கறிஞர் அணி செய​லா​ளர் ஐ.எஸ்​.இன்​பதுரை, டெல்​லி​யில் உள்ள இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தில் நேற்று மனு அளித்​துள்​ளார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 107 இடங்​களைத்​தான் தவெக அரசு பெற்​றிருந்​தது.

118 இடங்​கள் தேவை என்ற நிலை​யில் தனக்​கான ஆதரவை அதி​க​மாகப் பெறு​வதற்​காக குதிரை பேரத்​தில் ஈடு​பட்​டது. இதில் முதல்​வர் விஜய்யே நேரடி​யாகச் சென்று அதி​முக எம்​எல்​ஏக்களைச் சந்​தித்து குதிரை பேரத்​தில் ஈடு​பட்​டுள்​ளார்.

அதன்​ பிறகு அதி​முக கொற​டாவை மீறி 25 பேர் தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். அதில் 21 பேர் தங்​கள் நிலைக்கு வருந்தி மன்​னிப்பு கடிதம் அளித்​தனர். 4 பேர் கடிதம்கொடுக்​காமல், எம்​எல்ஏ பதவி​களை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​தனர்.

எந்த காரணத்​துக்​காக அவர்​கள் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​கிறார்​கள் என்று பேர​வைத் தலை​வர் விசா​ரித்​திருக்க வேண்​டும். அவ்​வாறு செய்​யாமல், அவர்​களின் ராஜி​னா​மாவை ஏற்​றது தவறு.

இனிமேல் தவறு செய்ய மாட்​டோம் என்று மன்​னிப்பு கேட்ட சி.​விஜய​பாஸ்​கர், எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் ஆகியோர் தவெக​வில் இணைந்​துள்​ளனர். இது அரசி​யலமைப்பு சட்​டத்தை ஏமாற்​றும் செயல்.

இதன்​மூலம் தமிழகத்​தில் 6 தொகு​தி​கள் காலி​யாகும். அங்கு 6 மாதத்​துக்​குள் தேர்​தல் நடத்த வேண்​டும் என்​பது சட்​டம். அங்கு இடைத்​தேர்​தல் நடந்​தால் கட்சி தாவிய 6 பேரும் அரசி​யலமைப்பு சட்​டத்தை கேலிக்​கூத்​தாக்கி விட்டு போட்​டி​யிட வாய்ப்​புள்​ளது. இல்​லா​விட்​டால் தவெக தனது வேட்​பாளரை நிறுத்​தும்.

தமிழகத்​தில் 6 தொகு​தி​களில் ஏற்​பட்ட காலி​யிடம், சந்​தேகத்​துக்​கிட​மான வகை​யில் ஏற்​பட்ட காலி​யிட​மாகும். இது தொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஏற்​கெனவே வழக்கை தொடர்ந்​தோம். இது​போன்ற சில வழக்​கு​களில் வழக்கு நிலு​வை​யில் இருந்​தால் தேர்​தல் நடத்​தக் கூடாது என்று உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

அதன்​படி அங்கு தேர்​தல் நடத்​தக்​கூ​டாது என தேர்​தல் ஆணை​யத்​தில் புகார் அளித்​திருக்​கிறோம். மேலும், தங்​கள் சுய​லாபத்​துக்​காக கட்சி தாவலில் ஈடு​படும் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என நீதி​மன்​றத்தை நாடி இருக்​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT