சென்னை: அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் ஜூலை 1-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அதிமுக மகளிர் அணியின் செயல்பாடுகள் குறித்தும், கழக வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்கு குறித்தும், கழக மகளிர் அணி மாநில நிர்வாகிகள், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்கள், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்டக் கழக இணைச் செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர், தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் கழக செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை, ராயப்பேட்
டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 1-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.
இக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளார். மூத்த தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். ஆகவே, மேற்கண்ட பொறுப்புகளில் பணியாற்றி வரும் மகளிர் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுளளது.