சென்னை: சட்டப்பேரவையில் நேற்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி பேசும்போது, “திமுக எம்எல்ஏ ஒரு தவறான கருத்தை பதிவு செய்தார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களை முதன்முதலில் 1983-ல் தருமபுரியில் தொடங்கியது எம்ஜிஆர்தான். மகளிர் குழுக்களுக்கான வங்கிக்கடன் 2006-2011 திமுக ஆட்சியில் ரூ.9,898 கோடி மட்டுமே வழங்கப்பட்டது.
2011-2021 வரையிலான அதிமுக ஆட்சியில் ரூ.83,000 கோடி வழங்கப்பட்டுள்ளது”என்றார். அதற்கு திமுக எம்எல்ஏ கே.என்.நேரு, “1989-ல் தருமபுரிக்கு சென்று மகளிர் சுய உதவிக்குழுவை ஆரம்பித்து வைத்தது கருணாநிதிதான்.
ஆனால், எஸ்.பி.வேலுமணி 1983 என்று கூறுகிறார். இதுகுறித்து பேரவையில் பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வேலுமணி புதிதாக எம்ஜிஆர் தொடங்கியதாக மீண்டும் பேசுகிறார்” என்று தெரிவித்தார்.