தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 65 தொகுதிகள் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. அதிமுக-வில் ஏற்கெனவே பாஜக-வுக்கு 27 தொகுதிகள், பாமக-வுக்கு 18, அமமுக-வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து, தமாகா-வுக்கு 5 தொகுதிகள், ஐஜேகே-வுக்கு 2 தொகுதிகள், புரட்சி பாரதம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி என நேற்று முன்தினம் இரவே இறுதி செய்யப்பட்டது. இதன்படி அதிமுக, கூட்டணி கட்சிகளுக்கு 65 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம் ஆகியோர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை.
இதற்கிடையில் நேற்று காலை அதிமுக போட்டியிடும் 23 தொகுதிகள் மற்றும் அதில் போட்டியிடும் 23 வேட்பாளர்கள் பட்டியலை பழனிசாமி வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி விவரங்களை அறிவித்தார். அதன் விவரம்:
பாஜக-வுக்கு, மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவிநாசி, திருப்பூர் (தெற்கு), கோவை- வடக்கு, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர் (சிவகங்கை), மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் ஆகிய 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாமக-வுக்கு, சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம, ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில், கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்தூர் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமமுக-வுக்கு பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), நாங்குநேரி, ஓட்டப்பிடாரம், திருச்சி (மேற்கு), சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மடத்துக்குளம் ஆகிய 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஐஜேகே-வுக்கு பல்லாவரம், குன்னம் ஆகிய 2 தொகுதிகள், புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி.குப்பம் தொகுதி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ராஜபாளையம் தொகுதி, தமாகா-வுக்கு ஒட்டன்சத்திரம், ஈரோடு (மேற்கு), ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பழனிசாமி அறிவித்தார்.