அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாவட்டச் செயலா ளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. | படம்:எஸ். சத்தியசீலன் |

 
தமிழகம்

அதிமுக உரிமை மீட்புக் குழு, கழகமாக மாற்றம்: டிச.15-ம் தேதி முக்கிய முடிவு எடுப்பதாக ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அ​தி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் குழு, இனி உரிமை மீட்​புக் கழக​மாக செயல்​படும் என ஓ.பன்​னீர்​செல்​வம் தலை​மை​யில் நடந்த கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. டிச.15-ம் தேதி எடுக்​கப்​போகும் முடிவு, அரசி​யல் வரலாற்​றில் திருப்​பு​முனை​யாக அமை​யும் என்று ஓ.பன்​னீர்​செல்​வம் தெரி​வித்​துள்​ளார்.

அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்பு குழு மாவட்​டச் செய​லா​ளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம், அதன் ஒருங்​கிணைப்​பாள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான ஓ.பன்​னீர்​செல்​வம் தலை​மை​யில், சென்னை வேப்​பேரி​யில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்​டத்​தில், ‘இது​வரை அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்பு குழு​வாக செயல்​பட்டு கொண்​டிருந்த அமைப்பு , இனி அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்பு கழக​மாக செயல்​படும். கூட்​டணி தொடர்​பான முடிவு​கள் எடுக்க ஓ.பன்​னீர்​செல்​வத்​துக்கே முழு அதி​காரம் வழங்​கப்​படு​கிறது’ என 2 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

பின்​னர், இக்​கூட்​டத்​தில் ஓ.பன்​னீர்​செல்​வம் பேசி​ய​தாவது: சில சுயநல​வா​தி​கள் சர்​வா​தி​கார போக்​கோடு அதி​முகவை வழிநடத்த முற்​பட்​ட​தால் 11 தோல்வி​களை சந்​தித்து உள்​ளது. தான்​தோன்​றித்​தன​மாக நிர்​வாகத்தை கையில் எடுத்​து, இன்று நாம் கண்​ணீர் விட்டு அழும் சூழ்நிலையை உரு​வாக்​கிய​வர்​களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்​டும் என நம் நிர்​வாகி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

அதன் அடிப்​படிடை​யில், எதிர்​கால திட்​டங்​களை வகுத்து மீண்​டும் எம்​ஜிஆர் எதற்​காக அதி​முகவை உரு​வாக்​கி​னாரோ அந்த நோக்​கத்​தில் செயல்பட வைப்​போம். வரும் டிச.15-ம் தேதி மீண்​டும் நிர்​வாகி​கள் மற்​றும் மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் நடத்​தப்​படும். அதற்​குள் அதி​முகவை மீண்​டும் ஒருங்​கிணைத்து ஒற்​றுமைப்​படுத்த வேண்​டும்.

அப்​படி நடை​பெற​வில்லை என்​றால் உரிமை மீட்பு கழகம், தமிழக மக்​கள் ஏற்​றுக் கொள்​ளும் முடிவை எடுக்​கும். அந்த நிலைக்கு எங்​களை தள்ளி விடாதீர்​கள். டிச.15-ம் தேதி எடுக்​கப் போகும் முடிவு, அரசி​யல் வரலாற்​றில் திருப்​பு​முனை​யாக அமை​யும். திருந்​த​வில்லை என்​றால் அன்​றைய தினம் திருத்​தப்​படு​வீர்​கள். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்த கூட்​டத்​தில், எம்​எல்​ஏக்​கள் ஆர்​.​வைத்​திலிங்​கம், ஐயப்​பன், எம்​.பி. தர்​மர், முன்​னாள் அமைச்​சர் வெல்​லமண்டி நடராஜன் மற்​றும் மாவட்​டச் செய​லா​ளர்​கள்​, நிர்​வாகி​கள்​ கலந்​துகொண்​டனர்​.

SCROLL FOR NEXT