தமிழகம்

கூடைப்பந்து சம்மேளன நிர்வாகியாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நீடிப்பது தவறு: அதிமுக எம்.பி. இன்பதுரை குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜூ​னா, இந்​திய கூடைப்பந்து சம்​மேளன தலை​வ​ராக நீடிப்​ப​து தவறு என்று அதி​முக எம்பி ஐ.எஸ்​.இன்​பதுரை குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளார்.

அமைச்​சர் ஆதவ் அர்​ஜூ​னா, தவெக​வில் இணைவதற்கு முன்பே இந்​திய கூடைப்பந்து சம்​மேளனத்​தின் தலை​வ​ராக இருந்​தார். தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக அதிக இடங்​களில் வெற்றி பெற்று ஆட்​சி​யமைத்​துள்​ளது.

அதனைத் தொடர்ந்து முதல்​வர் விஜய் தலை​மையி​லான அமைச்​சர​வை​யில் ஆதவ் அர்​ஜூனா இடம்​பெற்​றுள்​ளார். அவருக்​கு, பொதுப்​பணித்​துறை (கட்​டிடங்​கள்), நெடுஞ்​சாலைகள் மற்​றும் சிறு துறை​முகங்​கள், இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை ஆகிய துறை​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

விளை​யாட்​டுத்​துறை அமைச்​ச​ராக இருக்​கும் ஆதவ் அர்​ஜூ​னா, இந்​திய கூடைப்​பந்து சம்​மேளனத்​தின் தலை​வ​ராக​வும் நீடித்து வரு​வ​தாக அதி​முக எம்பி ஐ.எஸ்​.இன்​பதுரை குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் தனது எக்ஸ் பக்​கத்​தில், “தமிழ்​நாடு விளை​யாட்டு அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா, இந்​திய கூடைப்​பந்து சம்​மேளனத்​தின் (BFI) தலை​வ​ராக​வும் தொடர்ந்​தும் பதவி வகித்து வரு​கிறார் என்று பிஎஃப்ஐ இணை​யதளம் உறு​திப்​படுத்​துகிறது.

இது தவறாகும். இதன் மூலம், விளை​யாட்டு நிர்​வாகத்​தின் சார்​பில்​லாத தன்மை பாதிக்கப்​படும். பொது​மக்​களின் நம்​பிக்​கையை பாதிக்​கும்.

நிர்​வாகம் நியாய​மாக இருக்க வேண்​டுமெனில், பாகு​பாடு இல்லாமல் இருப்பது மட்​டுமல்ல,பாகு​பாடு இருப்​ப​தாக ஒரு எண்​ணம் தோன்​றாமல் இருப்​பது அவசி​யம்” என்று பதி​விட்​டுள்​ளார்.

நேற்று முன்​தினம் இன்​பதுரை வெளி​யிட்ட பதி​வில், அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னாவின் செயல்​கள். அவர் அதிமுக உள்​ளிட்டமற்ற அரசி​யல் கட்சிகள் பற்றி கூறிய கருத்துகளை பார்த்​தால், அவர்தான் நடை​முறைப்​படி முதல்​வ​ராக இருப்​பது போல தெரி​கிறது.

இது​வரை அவர் சேராத ஒரே கட்சி ‘கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி’ தான்” என கூறியிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT