சென்னை: ஓசூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ணரெட்டி(அதிமுக) பேசியதாவது:ஓசூர் தொகுதியின் விவசாயிகளின் முக்கியமான கோரிக்கை, ஓசூரில் விமான நிலையம் வேண்டாம்.
இது என்னுடைய குரல் அல்ல, விவசாயிகளின் குரல். விவசாயிகள் ஏற்கெனவே சிப்காட், சிட்கோ, தொழிற்சாலைகளுக்காக நிலத்தை கொடுத்துள்ளனர். மீதமுள்ள விவசாய நிலங்களை எடுத்தால் விவசாயம் பாதிக்கப்படும்.
ஓசூரில் ஏற்கெனவே தனியார் விமான நிலைய கட்டமைப்பு உள்ளது, அதை மேம்படுத்தி விரிவாக்கம் செய்ய வசதிகள் உள்ளன. பரந்தூர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றது போல், ஓசூர் விவசாயிகளின் குரலையும் கேளுங்கள்.
வளர்ச்சி திட்டங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால் விவசாயிகளின் நிலத்தை அழித்து வளர்ச்சி வேண்டாம். ஓசூர் விவசாயிகளின் உணர்வையும் கருத்தில் கொண்டு புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்.
பெங்களூருவில் உள்ள தொழிற்சாலை களில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுகள் தென் பெண்ணை ஆற் றில் கலக்கிறது. இதனால் ஆற்றில் உள்ள மீன்கள் பாதிக்கப்படுகின்றன.
இதுதவிர கேரட், நூக்கல், முள்ளங்கி போன்ற காய்கறிகளின் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள் ளது. மேலும் ஓசூ ரை தலை நகராக கொண்டு ஓசூர், சூளகிரி, தேன்கனிக் கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களை உள்ளடக்கி புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.
மேலும் பூ மார்க்கெட் அதிமுக ஆட்சி யில் கட்டப்பட்டு, கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது, அதை உடனடியாக திறக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனிடையே வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “எந்த வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதற்கு விவசாய நிலங்களை தான் எடுத்தாக வேண்டும். வேறு வழியில்லை. ஓசூரில் விமான நிலையம் வரும் போது பெங்களூருவை விட அதிக வளர்ச்சி இருக்கும். ஓசூர் மக்களின் பொருளாதாரமும் வளரும்.” என்றார்.