எம்​.கஜா என்​கிற கஜேந்​திரன்

 
தமிழகம்

தங்க மோதிரம், ராயல் என்பீல்ட் பைக்: நிர்வாகிகளுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசிய அதிமுக வேட்பாளர்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: செங்​கல்​பட்டு சட்​டப்​பேரவை தொகுதி அதி​முக வேட்​பாள​ராக எம்​.கஜா என்​கிற கஜேந்​திரன் அறிவிக்​கப்​பட்​டுள்​ளார்.

தேர்​தல் பிரச்​சா​ரத்தை தொடங்​கி​யுள்ள அவர், தொகு​திக்கு உட்​பட்ட மறைமலைநகர் காட்​டாங்​கொளத்​தூர் கிழக்கு ஒன்​றி​யம், செங்​கல்​பட்டு நகரம் உள்​ளிட்ட பகு​தி​களில் கட்சி நிர்​வாகி​களை சந்​தித்து ஆதரவு திரட்​டினர்.

          

அப்​போது பேசிய அவர், “தி​முக ஆட்​சி​யில் சட்​டம் ஒழுங்​கு, பெண்​களின் பாது​காப்பு கேள்விக்​குறி​யாக உள்​ளது. கஞ்சா உள்​ளிட்ட போதைப் பொருட்​கள் அதி​கரித்​துள்​ளன.

திமுக ஆட்​சி​யில் தமிழகம் உலக அளவில் தலைகுனிந்து உள்​ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்​டை​யில் கே.பழனிச்​சாமி என்​னும் நான் சத்​தம் ஒலித்​தால்​தான் இதற்​கெல்​லாம் முடிவு கட்ட முடி​யும்” என்​றார்.

நான் கியாரண்​டி..

மேலும், கட்சி நிர்​வாகி​களை கவரும் வகை​யில், திமுக வேட்​பாளரை​விட பாகம் அளவில் 100 வாக்​கு​கள் அதி​கம் பெறு​பவர்​களுக்கு கால் பவுன் மோதிர​மும், 300 வாக்​கு​கள் அதி​கம் பெறு​பவர்​களுக்கு ரூ.3 லட்​சம் மதிப்​புடைய ராயல் என்​பீல்ட் பைக்​கும் வழங்​கப்​படும்.

இந்த பரிசுகளை பழனி​சாமி கையாலேயே உங்​களுக்​குக் கிடைக்க ஏற்​பாடு செய்​கிறேன். அதற்கு நான் கியாரண்​டி’ என்​றார். இதைக் கேட்​டதும் கூட்​டத்​துக்கு வந்​திருந்த நிர்​வாகி​கள்​ கைகளை தட்​டி ஆரவாரம்​ செய்​தனர்​.

SCROLL FOR NEXT