தாம்பரத்தில் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன்.

 
தமிழகம்

“முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி

பெ.ஜேம்ஸ் குமார்

தாம்​பரம்: அனைத்து ஏரி​களையும் தூர்​வாரி சீரமைத்து முன்​மா​திரி​யான தொகு​தி​யாக தாம்பரத்தை மாற்​றுவேன் என, அதி​முக வேட்​பாளர் சிட்​ல​பாக்​கம் ச.ராஜேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் தாம்பரம் தொகு​தி​யில் அதி​முக வேட்​பாள​ராக களம் ​காணும் சிட்​லப்​பாக்​கம் ராஜேந்​திரன், நேற்று தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டார்.

          

பல இடங்​களில் மக்​கள் பட்​டாசு வெடித்​தும், மாலை அணி​வித்​தும், பெண்​கள் ஆரத்தி எடுத்​தும் வரவேற்பு அளித்​தனர். பிரச்​சா​ரத்​துக்கு இடையே ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்​டி​யில் அவர் கூறிய​தாவது: அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தமிழகத்​தின் முதல்​வ​ராகப் பதவி ஏற்​றவுடன் மக்​களுக்​கான அனைத்​துத் திட்​டங்​களும் நிறைவேற்​றித் தரப்​படும்.

தமிழகத்​திலேயே முன்​மா​திரி​யான தொகு​தி​யாக தாம்​பரம் தொகு​தியை மாற்​று​வதற்​கான அனைத்து திட்​டங்​களும் பழனி​சாமி வழி​காட்​டு​தலின் பேரில் நிறைவேற்​றப்​படும். அதி​முக ஆட்​சி​யில் ரூ.25 கோடி​யில் சிட்​ல​பாக்​கம் ஏரியை சீரமைக்க நிதி ஒதுக்​கப்​பட்​டது.

பின்​னர், ஆட்சி மாற்​றத்​தின் ​போது திமுக கிடப்​பில் போட்​டது. அதி​முக சார்​பில் பல்​வேறு போராட்​டத்​துக்​குப் பிறகு சீரமைப்பு பணி​கள் நடை​பெற்​றன. நாங்​கள் ஆட்​சிக்கு வந்​தவுடன் கூடு​தல் நிதி ஒதுக்​கி, இன்​னும் சிறப்​பாக பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். மேலும், சிட்​ல​பாக்​கம் ஏரி போல் தொகு​தி​யில் உள்ள அனைத்து ஏரி​களும் சீரமைக்​கப்​படும்.

தாம்​பரம் முடிச்​சூர் சாலை, வேளச்​சேரி சாலை அகலப்​படுத்​தும் பணி​கள், பெருங்​களத்​தூர் - வேளச்​சேரி சாலையை இணைக்​கும் ஈஸ்​டன் பைபாஸ் சாலை திட்​டத்தை விரைந்து முடிக்​க​வும் ராஜகீழ்ப்​பாக்​கம் - கேம்ப் ரோடு, முடிச்​சூர் - மணிமங்​கலம் சாலை பகு​தி​யில் மேம்​பாலம் அமைக்​க​வும், தாம்​பரம் தொகுதி முழு​வதும் தின​மும் குடிநீர் கிடைக்​க​வும், பாதாள சாக்​கடை திட்​டத்தை நிறைவேற்​ற​வும் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

தாம்பரம் அரசு தலைமை மருத்​து​வ​மனை​யில் மருத்​து​வர்​கள், செவிலியர்​கள், மருத்​து​வப் பணி​யாளர்​களின் பற்​றாக்​குறை போக்​கப்​படும்.

மேலும், இதய சிகிச்சை பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்​கப்​படும். மக்​களின் குறை​கள் அனைத்​தும் முகாம் அமைத்து நிவர்த்தி செய்​யப்​படும்.

திமுக ஆட்​சி​யில் பெண்​களின் பாது​காப்பு கேள்விக்​குறி​யாகி உள்​ளது. சிறுமியர் முதல் மூதாட்டி வரை யாரும் வெளியே பாது​காப்​பாக செல்ல முடி​யாத அவலநிலை உள்​ளது.

இதனால், திமுக ஆட்​சி​யின் மீது மக்​கள் மிகுந்த கோபத்​தில் உள்​ளனர். இபிஎஸ் தலை​மை​யில் தமிழகத்​தில் அதி​முக ஆட்சி அமைவதை எந்த சக்​தி​யாலும் தடுக்க முடி​யாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT