அமைச்சர் கீர்த்தனா. | படம்: எஸ்.சத்தியசீலன் |

 
தமிழகம்

ஓசூரில் இயங்கி வரும் ‘ஏஐ’ நிறுவனத்தின் மூலம் 1,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க திட்டம்: அமைச்சர் கீர்த்தனா தகவல்

செய்திப்பிரிவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூர் எல்​காட் தொழில்​நுட்​பப் பூங்​கா​வில் இயங்கி வரும் ‘ஜி.டபிள்யூ.சி டேட்டா ஏ.ஐ நிறு​வனத்​தின் மூலம் தமிழகத்​தில் 1,000 புதிய செயற்கை நுண்​ணறிவு வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​பட உள்​ள​தாக தொழில்​துறை அமைச்​சர் கீர்த்​தனா தெரி​வித்​துள்​ளார்.

ஓசூர் அருகே சென்​னசந்​திரம் ஊராட்​சி​யில் உள்ள எல்​காட் தொழில்​நுட்​பப் பூங்கா வளாகத்​தில் ‘ஜி.டபிள்யூ.சி டேட்டா ஏ.ஐ’ நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. இந்​நிறு​வனத்தை தொழில்​துறை அமைச்​சர் கீர்த்​தனா நேற்று பார்​வை​யிட்டு பணி​யார்​களு​டன் கலந்​துரையாடினார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கீர்த்​தனா கூறிய​தாவது: தமிழகத்​தைச் சேர்ந்த தரவு மற்​றும் செயற்கை நுண்​ணறிவு நிறு​வனமான ‘ஜி.டபிள்யூ.சி டேட்டா.ஏ.ஐ’ மாநிலத்​தில் 1,000 புதிய ‘ஏ.ஐ’ வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதற்​காக முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசுடன் இந்த நிறு​வனம் சமீபத்​தில் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. இந்த ஒப்​பந்​தத்​தின் முன்​னேற்​றம் மற்​றும் இது​வரை எடுக்​கப்​பட்ட நட​வடிக்​கைகள் குறித்து நிறு​வனத்​தின் தலை​மைக் குழு​வினருடன் விரிவான ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது.

பொது​மக்​களுக்​கான அரசு சேவை​களை விரைவாகவும், திறன்​மிக்​கதாகவும் மாற்​றும் வகை​யில் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​து​வது குறித்த யோசனைகளை நிறு​வனத்​தினர் சமர்ப்​பித்​துள்​ளனர். 11 தொழில்​நுட்​பத் துறைகளில் 250-க்​கும் மேற்​பட்ட நிபுணர்​களைக் கொண்​டுள்ள இந்​நிறு​வனம், உற்​பத்தி, சில்​லறை வணிகம், நிதிச் சேவை​கள், சுகாதா​ரம் மற்​றும் பொதுத்​துறை உள்​ளிட்ட பல்​வேறு துறைகளுக்கு சேவை வழங்கி வரு​கிறது. இவ்​வாறு அமைச்​சர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT