அக்ரி கிருஷ்ணமூர்த்தி

 
தமிழகம்

“அதிமுகவை பற்றி குறை சொல்வதற்கு சி.வி.சண்முகத்துக்கு எந்த தகுதியும் இல்லை” - அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சனம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: ​அதிமுகவை பற்றி குறை கூறமுன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு எந்த அருகதையும் இல்லை என அதிமுக கொறடா அக்ரி எஸ்​.எஸ்​.கிருஷ்ண​மூர்த்தி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அதி​முக தலைமை முதல் தொண்​டர் வரை யாரும் திமுக​வுக்கு ஆதர​வாக செயல்​பட​வில்லை என்​பதை சி.​வி.சண்​முகம் உணர வேண்​டும். தவெக அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா​வும் இதே கருத்தை கூறி வரு​கிறார். அவர் நாவடக்​கத்​தோடு பேச வேண்​டும்.

ஆணவத்​தால் குதிரை பேரம் நடத்தி ஆள் பிடிக்​கும் வேலையை அவர் நடத்தி வரு​கிறார். உங்​களது தவறை திருத்​தவில்​லை​யென்​றால் அதி​முக உண்​மை​யான தொண்​டர்​கள் கொதித்து எழு​வார்​கள். பாமக உள்​ளிட்ட பல்​வேறு கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​களு​டன் இணைந்து செயல்​பட்டு அதி​முக கூட்​டணி 53 இடங்​களில் வெற்றி பெற்​றது. சி.​வி.சண்​முகம் தான் விழுப்​புரம் மாவட்​டத்​தில் தட்டுத்தடு​மாறி வெற்றி பெற்​றுள்​ளார் என்​பதுதான் உண்​மை.

வடமாவட்​டங்​களில் வலு​வான கட்​சி​யான பாமகவை பழனி​சாமி தான் கூட்​ட​ணி​யில் இணைத்​தார். விழுப்​புரம் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் சி.வி சண்​முகம் மட்​டுமே வெற்றி பெற்​றார். அவர் பரிந்​துரை செய்​தவர்​களை தான் பொதுசெய​லா​ளர் வேட்​பாளர்​களாக அறி​வித்​தார். அவர்​கள் யாரும் வெற்றி பெற​வில்​லை.

ஆகவே சி.​வி.சண்​முகத்​துக்கு அதி​முகவை பற்றி குறை​கூற எந்த அரு​கதை​யும் இல்​லை. விழுப்​புரம் மாவட்​டத்​தில் அதி​முக தோல்விக்கு சி.​வி.சண்​முகமே காரணம். கழக அமைப்பு செய​லா​ளர், மாநிலங்​களவை உறுப்​பினர், அமைச்​சர் பதவி ஆகியவை பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி போட்ட பிச்​சை​தான். சி.வி.சண்​முகம் நாவடக்​கத்​தோடு பேச வேண்​டும்.

தமிழகத்​தில் உள்ள அனைத்து தொகு​தி​களில் நிர்​வாகி​களை அழைத்து கருத்து கேட்ட பின்​னர்தான் அதி​முக வின் செயற்​குழு கூட்​டமோ அல்​லது பொதுக் ​குழு கூட்​டமோ நடத்​தப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். இந்த செய்​தி​யாளர்சந்​திப்​பின்​போது, எம்எல்ஏக்கள் எஸ்​.​ராமச்​சந்​திரன், வேலு, மாநில அம்மா பேரவை துணை செய​லா​ளர் இ.என்​.​நா​ராயணன் உள்பட பலர் உடனிருந்​தனர்​.

SCROLL FOR NEXT