தமிழகம்

சென்னை, புறநகரில் மழை: மோசமான வானிலையால் அமித் ஷா ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை, புறநகர் பகு​தி​களி​ல் தொடர் மழை பெய்து வரு​கிறது. குறிப்​பாக தாம்​பரம், மீனம்​பாக்​கம், பல்​லா​வரம், புளியந்​தோப்பு உள்​ளிட்ட பகு​தி​களில் மழை பெய்​து, குளிர்ச்​சி​யான சூழலை ஏற்​படுத்​தி​யது.

மெரி​னா​வில் வார விடுறையை கழிக்க வந்த மக்​கள், குழந்​தைகளு​டன் மழையில் நனைந்து சிரமத்​துக்​குள்​ளா​யினர். இதனிடையே புதுச்​சேரி​யில் நேற்று நடை​பெற்ற பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்ற மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, ஹெலி​காப்​டர் மூல​மாக சென்னை விமான நிலை​யம் நோக்கி நேற்று மாலை வந்து கொண்​டிருந்​தார்.

அப்​போது கனமழை பெய்ததால், அமித் ஷாவின் ஹெலி​காப்​டர் தரை​யிறங்​கு​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டது. பின்​னர் அவசர​மாக தாம்​பரம் விமானப்​படை தளத்​தில் பாது​காப்​பாக தரை​யிறங்​கி அங்​கிருந்து காரில் சென்னை விமான நிலை​யம் வந்​து, தனி விமானத்​தில் டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார்.

SCROLL FOR NEXT