எஸ்.பி.வேலுமணி

 
தமிழகம்

“அதிமுக மூன்றாவது இடத்துக்குச் சென்றுவிட்டது” - எஸ்.பி.வேலுமணி

செய்திப்பிரிவு

பழநி: கட்​சி​யில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடி​வி தினகரன் உள்பட அனை​வரை​யும் அதி​முக​வில் சேர்க்க வேண்​டும் முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி தெரி​வித்​துள்​ளார்.

திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி தொகுதி அதி​முக எம்​எல்ஏ ரவிமனோகரனின் எம்எல்ஏ அலு​வல​கத் திறப்பு விழாவில் கலந்து கொண்டபின் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: ஒரு மாத காலத்​துக்கு முன்​னால் எங்​களுக்கு கொடுத்த பதவி​களை வேண்​டாம், நாங்​கள் உறுப்​பினர்​களாக இருக்​கிறோம் என்று சொல்​லி​விட்டோம்.

பழைய பதவி​களைத் தரு​வ​தாகச் சொன்​ன​தால்​தான் சேர்ந்​தோம். பொதுக்​குழு​வைக் கூட்டி தோல்வி குறித்து ஆராய வேண்​டும் என்று சொல்​லி​யிருந்​தோம். ஆனால் பொதுக்​குழு செயற்​குழு உறுப்​பினர்​களை பழனி​சாமி தொடர்ந்து நீக்​கிக்​கொண்டே இருக்​கிறார். கட்​சி​யைப் பலப்​படுத்த வேண்​டும். அதற்கு கட்​சி​யில் இருந்து பிரிந்து சென்​றசசிகலா, டிடிவி தினகரன் உள்படஅனை​வரை​யும் சேர்க்க வேண்​டும். எங்​களுக்கு பழையபடி பொறுப்​பு​களை வழங்​கி​னால் ஏற்​றுக்​கொள்​வோம்.

இன்று கட்சி மூன்​றாவது இடத்​துக்​குச் சென்​று​விட்​டது. திமுக​வுடன் செல்ல அதி​முக முடிவுசெய்​த​தால்​தான் நாங்​கள் தவெக​வுக்கு ஆதரவு கொடுத்​தோம். இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT