கோவை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று வீராங்கனைகள் யோகாசனம், ஜிம்னாஸ்டிக் பயிற்சி மேற்கொள்வதை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பார்வையிட்டார். | படம்: ஜெ.மனோகரன் |

 
தமிழகம்

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணி நிறுத்திவைப்பு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

செய்திப்பிரிவு

கோவை: கோவையில் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானம் அமைக்​கும் பணி நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா தெரி​வித்​தார்.

தமிழக பொதுப்​பணி மற்​றும் விளை​யாட்டு துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா கோவை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் போதை மற்​றும் மது கலாச்​சா​ரம் இளைஞர்​களிடம் அதி​கரித்​துள்​ளது.

இதனால் பெண்​கள் பாது​காப்​புக்கு பல்​வேறு அச்​சுறுத்​தல்​கள் உரு​வாகி உள்​ளன. கடந்த 8 ஆண்​டு​களுக்கு முன்பு இது​போன்ற போதை கலாச்​சா​ரம் தமிழ்​நாட்​டில் இல்​லை.

இன்​றைக்கு பள்​ளி, கல்​லூரி மாணவ, மாண​வியரிடையே கூட போதை கலாச்​சா​ரம் உரு​வாகி​யிருப்​பதை பார்க்​கிறோம். இதனை விளை​யாட்​டுத்​துறை மூலம் கவனம் செலுத்தி சரிசெய்ய உள்​ளோம்.

தமிழ்​நாடு முழு​வதும் எந்​தெந்த ஊரில் எந்​தெந்த விளை​யாட்டு மைதானங்​கள் உள்​ளது என்​பதை அறி​யும் வகை​யில், முதல்​வர் உத்​தர​வுப்​படி இணை​யதளம் ஒன்றை தயார் செய்து வரு​கிறோம்.

கோவை ஒண்​டிப்​புதூரில் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானம் அமைக்​கும் பணியை நிறுத்தி வைத்​துள்​ளோம். இது தொடர்​பாக உரிய வல்​லுநர்​கள் அனு​ம​தி​யுடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்​கப்​படும்.

சென்​னை, கோவை, திருச்​சி, நாகை, திருநெல்​வேலி போன்ற ஊர்​களில் உலகத்​தரத்​தில் விளை​யாட்டு மைதானங்​கள் உரு​வாவதற்​கான அறி​விப்பை முதல்​வர் வெளி​யிடு​வார்.

இந்​தி​யா​வில் அதி​க​மான சாலை விபத்​துகள் தமிழ்​நாட்​டில்தான் நடக்​கிறது. ஆண்​டு​தோறும் சராசரி​யாக தமிழக நெடுஞ்​சாலைகளில் 18 ஆயிரம் பேர் இறக்​கின்​றனர்.

இதனை குறைக்க நடவடிக்​கைகள் எடுக்க உள்​ளோம். வாக​னங்​களின் வேகத்தை குறைக்​க​வும், அபராதத்தை விதிக்​க​வும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்​ளது.

பாலங்​கள் கட்​டு​வது தொடர்​பாக கடந்த ஓராண்​டாக நடந்த டெண்​டர்​களை நிறுத்தி வைத்​துள்​ளோம். இதற்கு முன்பு இந்த துறை​யில் ஊழல்​கள் நடந்​துள்​ளன. டெண்​டர்​கள் தொடர்​பாக தணிக்கை நடந்து வரு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT