தமிழகம்

ரூ.15 கோடியை மறைத்த காரணத்தால்தான் நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்: உயர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: புலி படத்​துக்கு சம்​பள​மாக பெற்ற ரூ.15 கோடியை மறைத்​ததற்​காகத்​தான் நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்​கப்​பட்​ட​தாக உயர் நீதி​மன்​றத்​தில் வரு​மானவரித் ​துறை விளக்​கம் அளித்​துள்​ளது.

கடந்த 2016-17-ம் நிதி​யாண்டுக்​கான வரு​மானவரி கணக்கை தாக்​கல் செய்த நடிகர் விஜய், அந்த ஆண்டு வரு​மான​மாக ரூ.35 கோடியே 42 லட்​சத்து 91,890 பெற்​றுள்​ள​தாக குறிப்​பிட்டு இருந்தார்.

இந்​நிலை​யில், வரு​மானவரித் துறை 2015-ம் ஆண்டு நடிகர் விஜய் வீட்​டில் நடத்​திய சோதனை​யில் கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​களு​டன் ஒப்​பிட்​டுப் பார்த்​ததில், புலி திரைப்படத்​துக்கு பெற்ற ரூ.15 கோடி சம்​பளத்தை கணக்​கில் காட்​டா​மல் மறைத்​திருப்​பது தெரிய​வந்​தது.

அதையடுத்து நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வரு​மானவரித் துறை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், வரு​மானவரித் துறை​யின் உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை விதித்​தது. இந்​நிலை​யில் இந்த வழக்​கின் இறுதி விசா​ரணை நீதிபதி செந்​தில்​கு​மார் ராமமூர்த்தி முன்​பாக நடந்தது.

அப்​போது புலி படத்​துக்கு சம்​பள​மாக பெற்ற ரூ.15 கோடியை வரு​மான​மாக கணக்​கில் காட்​டாத​தால் தான் நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்​கப்​பட்​டதாக வரு​மானவரித் துறை தரப்​பில் கூறப்பட்டது.

இதில் எந்த தவறும் இல்​லை. கால​தாமத​மாக அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ள​தாக கூற முடி​யாது என வாதிடப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி, வரு​மான வரித்​துறை​யின் இந்த வாதத்​துக்கு விஜய் தரப்​பில் பதிலளிக்க உத்​தர​விட்டு அடுத்த விசாரணையை வரும் ஜன.23-ம் தேதிக்கு தள்ளிவைத்​தார்​.

SCROLL FOR NEXT