நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று இரவு தனது காரில் கோட்டூர்புரம் வழியாக ஓஎம்ஆர் நோக்கி சென்றுள்ளார்.
மத்திய கைலாஷ் அருகே திரும்பும் போது அதே திசையில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ஓட்டிச் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. உடனே காரில் இருந்து சிவகார்த்தி கேயன் இறங்கிச் சென்று, அந்த பெண்ணிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, காரில் இருந்து சிவகார்த்திகேயன் இறங்கியதைப் பார்த்த வாகன ஓட்டிகள் சாலையில் வாகனத்தை நிறுத்தி அவரை பார்க்க முயன்ற தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் நிலைமையை சரி செய்தனர்.