தமிழகம்

ஹெச்.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்!

வெற்றி மயிலோன்

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை சந்தித்து ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.

பாஜக மூத்த தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா (68). கடந்த 30-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்ற அவர், திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்டுள்ள பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

          

இந்நிலையில், நேற்று மருத்துவமனைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஹெச்.ராஜாவின் உடல்நலம் குறித்து, அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தனர். அதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் இன்று மருத்துவமனைக்குச் சென்று ஹெச்.ராஜாவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அதேபோல், பாஜக மகளிர் அணி தேசிய செயலாளரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ.வுமான வானதி சீனிவாசனும், ஹெச்.ராஜாவை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

SCROLL FOR NEXT