நடிகர் பிரகாஷ் ராஜ்
சென்னை: சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் பணிகள் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த ஜனநாயக நாட்டில் மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமை வாக்குரிமை மட்டும்தான்.
ஆனால் 13 கோடி பேரின் உரிமையை பறித்துள்ளனர். இதை வாக்காளர்கள் நீக்கம் என்ற பிரச்சினையாக மட்டும் பார்க்ககூடாது. பாஜக அரசு தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் மாற்றம் செய்ததில் இருந்து இந்த பிரச்சினை தொடங்குகிறது. மேலும் இதை சரியாகக் கண்காணிக்க வேண்டிய உச்ச நீதிமன்றமும் இதற்கு துணையாக இருந்துள்ளது.
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்கம் செய்து, அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். 2023-க்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டும். இதற்கு மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டும். ஊடகங்களின் குரல் என்பது மக்களின் குரல். பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திப்பதில்லை. முதல்வர் விஜய்க்கும் இதையே நான் கூற விரும்புகிறேன்.