தமிழகம்

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை - போக்குவரத்து துறை எச்சரிக்கை

தமிழினி

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 23 அன்று நடைபெறுவதை முன்னிட்டு (21.04.2026 முதல் 26.04.2026 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, அவ்வாறு இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அனுமதி ரத்து போன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தெரியவந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கீழ்காணும் அலைப்பேசி எண்கள் மூலம், வாட்ஸ் ஆப் / குறுஞ்செய்தி / குரல் பதிவு மூலமாக புகார் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  • போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை 1800 425 6151

  • இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (வடக்கு) 99442 53404

  • இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (தெற்கு) 97905 50052

  • இணைப்போக்குவரத்து ஆணையரகம், மதுரை 90953 66394

  • இணைப்போக்குவரத்து ஆணையரகம், கோயம்புத்தூர் 91235 93971

  • துணைப்போக்குவரத்து ஆணையரகம், விழுப்புரம் 96773 98825

  • துணைப்போக்குவரத்து ஆணையரகம், வேலூர் 98400 23011

  • துணைப்போக்குவரத்து ஆணையரகம், சேலம் 78456 36423

  • துணைப்போக்குவரத்து ஆணையரகம், ஈரோடு 80569 40040

  • துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி 90660 32343

  • துணைப்போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர் 90257 23800

  • துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருநெல்வேலி 96981 18011

  • துணைப்போக்குவரத்து ஆணையரகம், தஞ்சாவூர் 95850 20865

SCROLL FOR NEXT