தமிழகம்

அனுமதியின்றி செயல்படும் குவாரி மீது நடவடிக்கை: அமைச்சர் பிரபு தகவல்

செய்திப்பிரிவு

பரமக்குடி: தமிழகத்தில் அனுமதியில்லாமல் செயல்படும் மணல், கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கனிமவளத் துறை அமைச்சர் பிரபு தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனாரின் மணிமண்டபத்தில் அவரது 102-வது பிறந்த நாள் விழா அரசு சார்பில் நேற்று நடை

பெற்றது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா, கனிம வளத் துறை அமைச்சர் பிரபு ஆகியோர் இமானுவேல் சேகரனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 76 பேருக்கு ரூ.78.95 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பிரபு கூறும்போது, ‘‘தமிழகத்தில் அனுமதி இல்லாமல் செயல்படும் கல் மற்றும் மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுமதி பெற்ற குவாரிகளில் இருந்து கல், மணல் எடுத்துச் செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்ற நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT