மதுரை: இன்னும் ஆக்டிங்கிலேயே இருக்காதீர்கள், முதல்வராக ஆக்ட் பண்ணுங்க பாஸ் என முதல்வர் விஜய்யை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்ச்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழக முதல்வர் விஜய்யின் 6 மாத கால ஆட்சி மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வராவதற்கு முன்பு அவர், பச்சைக் குழந்தைகளுக்குக் கூட தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என குறை கூறினார். பெண்களின் பாதுகாவலராக அவர் தன்னைக் காட்டிக்கொண்டார்.
அவரது அவதாரம் பூஜ்ஜியமாக இருக்கிறது. மொத்தத்திலே அவர் பூஜ்ஜியத்திலேதான் ராஜ்ஜியம் செய்கிறாரே தவிர, மக்களுக்கான ஒரு அக்கறையில் அவர் செயல்படவில்லை.
அவர் போஸ் கொடுப்பதால் விலைவாசி குறைத்துவிடுமா, சட்டப்பேரவை காப்பாற்றப்படுமா? மின்கட்டணம் குறைந்து விடுமா? தடையில்லாத மின்சாரம் வந்து விடுமா? சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்காமல் இருப்பார்களா? பெண்களுக்கு பாதுகாப்பு வந்துவிடுமா?
அவரது அக்கறை எல்லாம் ஒவ்வொரு நாளும் போஸ் கொடுத்து தன்னை பாஸாகக் காட்டிக்கொள்வதில்தான் இருக்கிறது.
பொதுவாக விலைவாசி உயர்வதும், அதை கட்டுப்படுத்துவதும் எல்லா அரசுகளிலும் நடந்திருக்கிறது. ஆனால் தவெக முதல்வர் எந்த விளக்கமும் தர மறுக்கிறார். முதல்வர் அதற்குரிய விளக்கத்தைச் சொல்லி மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும்.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்துக்கு நிகரான போலீஸ் கோட்டை விடுகிறது. சிறையில் இருந்து கைதிகள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். பள்ளிக்கூடம் போகும் பச்சைப் பிள்ளைக்கும் பாதுகாப்பு தர முடியவில்லை என்றால், உங்களுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம். இப்படி கேட்டது உதயகுமார் இல்ல ப்ரோ.
தற்போது, முதல்வராக இருக்கும் நீங்கள் தான். அன்று நடிகராக இருந்து கேட்ட விஜய் இன்று முதல்வராக இருந்துகொண்டு நடிக்கிறார். முதல்வர் ஆகிவிட்டீர்கள். இனிமேல் ஆக்டிங்கை விடுங்க. ஆக்டிங்கிலேயே இருக்காதீங்க. முதல்வராக ஆக்ட் பண்ணுங்க. வாயை திறந்து பேசுங்க. மக்களுக்கு நன்மை நடக்கணும் பாஸ்.” என தெரிவித்துள்ளார்.