தமிழகம்

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை தொடக்கம்

வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்​ரல் மற்​றும் அரக்​கோணம் இடையே பயணிகளின் நீண்ட நாள் கோரிக்​கையை ஏற்று, முதன்​முறை​யாக குளிர்​சாதன வசதி கொண்ட மின்​சார ரயில் சேவை நேற்று முதல் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

வாரத்​தில் 5 நாட்​கள் இயக்​கப்​படும் இந்த புதிய சேவைக்​குப் பயணிகள் மத்​தி​யில் பெரும் வரவேற்பு கிடைத்​துள்​ளது. சென்னை ஐ.சி.எஃப். ஆலை​யில் தயாரிக்​கப்​பட்ட முதல் ஏசி மின்​சார ரயில், சென்னை கடற்​கரை - செங்​கல்​பட்டு மார்க்​கத்​தில் கடந்த ஆண்டு ஏப்​ரல் 19-ம் தேதி அறி​முகப்​படுத்​தப்​பட்​டது.

இதற்கு கிடைத்த வரவேற்​பைத் தொடர்ந்து, கூடுதல் ஏசி ரயில்​களை இயக்​கக் கோரி பயணிகள் கோரிக்கை விடுத்​தனர். தெற்கு ரயில்​வேயின் பரிந்​துரையின் பேரில், ஐ.சி.எஃப்.

ஆலை​யில் தயாரிக்​கப்​பட்ட 2-வது ஏசி மின்​சார ரயில் சென்னை கோட்​டத்​துக்கு வழங்​கப்​பட்டு, சோதனை ஓட்​டத்​துக்​குப் பின் தற்​போது சென்ட்​ரல் - அரக்​கோணம் மார்க்​கத்​தில் நேற்று முதல் தனது சேவை தொடங்​கியது.

12 பெட்​டிகள் கொண்ட இந்த ஏசி மின்​சார ரயில் வாரத்​தில் 5 நாட்​கள் (திங்​கள் முதல் வெள்ளி வரை) மட்​டுமே இயக்​கப்​படும். சனி மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை​களில் இந்த சேவை இருக்​காது.

தொடக்க நாளான நேற்று காலை 6.30 மணிக்கு ஆவடி​யில் இருந்து புறப்​பட்ட இந்த ரயில், காலை 7.45 மணிக்கு அரக்​கோணம் சென்​றடைந்​தது.

பின்​னர் அங்​கிருந்து காலை 8 மணிக்​குப் புறப்​பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்​ரலை வந்​தடைந்​தது. அதனைத் தொடர்ந்து காலை 9.40 மணிக்கு மீண்​டும் சென்ட்​ரலில் இருந்து ஆவடிக்கு இயக்​கப்​பட்​டது.

பயணிகள் உற்சாகம்

தெற்கு ரயில்வே உயர் அதி​காரி​கள் மற்​றும் ரயில் நிலைய மேலா​ளர்​கள் ரயி​லின் இயக்​கத்தை நேரில் கண்​காணித்​தனர்.

தொடக்க நாள் என்​ப​தால், சாதா​ரண டிக்​கெட் வைத்​திருந்த பயணிகள் அனைவரும் கூடுதல் கட்​ட​ணமின்றி உற்​சாகத்​துடன் ஏசி ரயி​லில் பயணம் செய்து செல்பி எடுத்து மகிழ்ந்​தனர்.

இந்த ரயி​லில் வழக்​க​மான சாதா​ரண மின்​சார ரயில் டிக்​கெட்​டுகள் மற்​றும் சீசன் டிக்​கெட்​டுகள் செல்​லாது. பயணிகள் ரயில்வே கவுண்​டர்​களில் ஏசி புறநகர் ரயில் டிக்​கெட் கேட்​டுப் பெற வேண்​டும்.

அதன்​படி, சென்னை சென்ட்​ரல் - வில்​லிவாக்​கம் வரை (பேசின் பாலம், வியாசர்​பாடி, பெரம்​பூர் மற்​றும் லோகோ ஒர்க்ஸ் உள்​ளிட்​டவை) ரூ.35 கட்​ட​ண​மாகவும், கொரட்​டூர், பட்​டர​வாக்​கம் வரை ரூ.40 கட்​ட​ண​மாகவும், அம்​பத்​தூர் முதல் ஆவடி, இந்து கல்​லூரி வரை ரூ.60 கட்​ட​ண​மாகவும் வசூலிக்​கப்​படு​கிறது.

அந்​தவகை​யில், சென்னை சென்ட்​ரல் முதல் அரக்​கோணம் வரை ரூ.230 கட்​ட​ண​மாக வசூலிக்​கப்​படு​கிறது. இந்தக் கட்​ட​ணம் அதி​க​மாக இருப்​ப​தாகக் கூறி, கட்​ட​ணத்​தைக் குறைக்க வேண்​டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT