லோகேஷ் தமிழ்செல்வன்
கோவை: வருகையில்லா ஆவணப் பதிவு முறையை வரும் 17-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார் என, கோவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவையில் நடந்த விளக்க கூட்டத்தில் அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் பேசியதாவது: வருகையில்லா ஆவணப் பதிவு நடைமுறை திட்டத்தை விரைவாகக் கொண்டு வர முதல்வர் ஆர்வத்துடன் உள்ளார். அதன்படி, தமிழ்நாடு முதல்வரால் வரும் 17-ம் தேதி வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறை தொடங்கி வைக்கப்பட உள்ளது.
தற்போது ‘ஃபர்ஸ்ட் பிளாட், ஃபர்ஸ்ட் சேல்’ ஆகிய ஆவணப் பதிவுகள் இணைய வழியில் கொண்டு வரப்படுகின்றன. இன்னும் படிப்படியாக அனைத்து விதமான பத்திரப் பதிவுகளும் இணையவழியில் கொண்டு வரப்படும். பத்திரப்பதிவுத் துறையில் இடைத்தரகர்களின் தலையீடு உள்ளிட்ட பல்
வேறு பிரச்சினைகளை களைந்து, ஒரு வெளிப்படையான முறையை உருவாக்க இப்புதிய நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டத்தில் பத்திரப்பதிவுத் துறை தலைவர் ஜி.கே.அருண்சுந்தர் தயாளன், ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.