தமிழகம்

“நீட் ஒழிப்பே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான நிரந்தரத் தீர்வு” - மு.க.ஸ்டாலின்

தமிழினி

சென்னை: “நீட் ஒழிப்பே அனைத்து பிரச்சினைகளுக்குமான நிரந்தரத் தீர்வாக அமையும்” என முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தலைநகர் டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீட் எனும் தேர்வு முழுக்க முழுக்க முறைகேடுகளுக்காக டிசைன் செய்யப்பட்டது என முதன்முதலில் எச்சரித்தது நாம்தான். அதனால்தான், இந்தத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே நீட்டின் தீமைகளை எடுத்துச் சொல்லித் திமுக எதிர்த்து வருகிறது.

இந்தியாவுக்கே முன்னோடியாக சமூகநீதியைப் பாதுகாக்கப் போராடி, முதல் அரசியல் சாசன திருத்ததுக்கு (First Constitutional Amendment) வழிகோலிய தமிழ்நாட்டின் கோரிக்கையும் நீட் ஒழிப்பு என்பதே. மற்ற எந்தக் கோரிக்கைகளை விடவும் #AbolitionOfNEET என்பதே இந்தப் போராட்டங்களின் மையப்புள்ளியாக இருக்க வேண்டும்.

நீட் ஒழிப்பே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான நிரந்தரத் தீர்வாக அமையும். #BanNEET #SaveStudents” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT