தமிழகம்

எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் வரையிலான சென்னை எல்லை சாலை பணி ஓராண்டில் நிறைவு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

செய்திப்பிரிவு

திரு​வள்​ளூர்: எண்​ணூர் துறை​முகம் முதல் மகாபலிபுரம் வரையி​லான சென்னை எல்லை சாலை திட்​டப் பணி​கள் ஓராண்​டுக்​குள் நிறைவடை​யும் என, பொதுப்​பணி மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத்​துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா தெரி​வித்​துள்​ளார்.

சென்னை மற்​றும் அதன் சுற்​று​வட்​டார பகு​தி​களில் பெருகி வரும் போக்​கு​வரத்து மற்​றும் எண்​ணூர் துறை​முகத்​தில் இருந்து தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களுக்கு செல்​லும் கனரக வாக​னங்​களால் ஏற்​படும் நெரிசல் ஆகிய​வற்றை குறைப்​ப​தற்​காக, தமிழக நெடுஞ்​சாலை துறை சார்​பில் எண்​ணூர் முதல் மகாபலிபுரம் வரை 132.87 கிமீ தூரத்​துக்கு சென்னை எல்லை சாலை திட்​டப் பணி​கள் 5 கட்​டங்​களாக நடை​பெற்று வரு​கின்​றன.

இதில், எண்ணூர் முதல் பஞ்​செட்டி வரை நடை​பெற்று வரும் சென்னை எல்லை சாலை திட்​டப் பணி​கள் தொடர்​பாக நேற்று அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா ஆய்வு மேற்​கொண்​டார்.

தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா தெரி​வித்​த​தாவது: திருச்​சி​யில் இருந்து 3 மணி நேரத்​தில் செங்​கல்​பட்டை அடைந்​தா​லும், செங்​கல்​பட்​டில் இருந்து பல்​லா​வரம் வந்து சேர மேலும் 4 மணி நேர​மாகிறது. அதற்கு காரணம், போக்​கு​வரத்து அதி​கள​வில் இருப்​பது​தான்.

கடந்த 40 ஆண்​டு​களாக போக்​கு​வரத்தை சீர் செய்ய முறை​யான திட்​டங்​கள் ஏற்​படுத்​தப்​பட​வில்​லை. சென்​னைக்​குள்ளே வரு​வதற்​கும், சென்​னை​யில் இருந்து வெளியே செல்​வதற்​கும் தனியே திட்​டம் வகுத்து வரு​கிறோம். எண்​ணூர் முதல் மகாபலிபுரம் வரையி​லான சாலை பணி​களை மேற்​கொள்​ளும் ஒப்​பந்த நிறு​வனத்​துக்கு பல்​வேறு உதவி​கள் தேவைப்​படு​வ​தால், அதுதொடர்​பாக ஆய்வு செய்​யப்​பட்டு வரு​கிறது.

எண்​ணூர் துறை​முகம் முதல் மகாபலிபுரம் வரையி​லான சென்னை எல்லை சாலை திட்​டப் பணி​கள் ஓராண்​டுக்​குள் நிறைவடைந்​து, பயன்​பாட்​டுக்கு வரும்.

சென்​னை​யில் உள்ள பெரும்​பாலான சாலைகள் உலகத்​தரத்​தில் 6 வழி சாலைகளாக மாற்​றப்​படும். இதனால்​, சென்​னை​யில்​ போக்​கு​வரத்​து நெரிசல்​ பெரு​மளவு குறை​யும்​. இவ்​​வாறு அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT