தமிழகம்

முதல்வர் ஸ்டாலினுடன் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று சந்திப்பு

செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று சென்னை வருகிறார்.

டெல்லியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் உட்பட நிர்வாகத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த அவசர சட்டத்துக்கு எதிராக அரவிந்த் கேஜ்ரிவால், பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்ட இன்று மாலை 4 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறார். இச்சந்திப்பு முதல்வரின் முகாம் அலுவலகம் அல்லது அறிவாலயத்தில் நடைபெறலாம் என தெரிகிறது.

SCROLL FOR NEXT