வேங்கைவயல் 
தமிழகம்

“5 மாதங்கள் ஆகிவிட்டது... வேங்கைவயல் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பாரா டிஜிபி?” - அன்புமணி கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: “வேங்கைவயல் சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க டிஜிபி நடவடிக்கை எடுப்பாரா?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் துப்பு துலக்கி, கொலையாளிகளை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினருக்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது மிகவும் சரியான செயல். ஊக்குவிப்புதான். காவல் துறையினருக்கு உத்வேகம் அளிக்கும். நானும் பாராட்டுகிறேன்.

அதே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமுதாயத்தினரின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடுங்குற்றம் நிகழ்ந்து இன்றுடன் 5 மாதங்கள் 6 நாட்களாகிவிட்டது. அதற்குக் காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க நடவடிக்கை எடுப்பாரா?” என்று அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT